விபுலாநந்தா மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியில் மருதம் வெற்றிவாகை..

காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி இன்று 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப.3மணியளவில் அதிபர் தி.வித்யாராஜன் தலைமையில் விபுலானந்தா மைதானத்தில் நடைபெற்றது.

இன்றைய போட்டிக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவினதும் காரைதீவுப்பிரதேச ஒருங்கி ணைப்புக்குழுவினதும் இணைத்தலைவருமான ஏ.கே.கோடீஸ்வரன் கலந்து சிறப்பித்தார்;.

கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான த.கலையரசன் மு.இராஜேஸ்வரன் ஆகியோரும் விசேட அதிதிகளாக கல்முனைவலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல்ஜலீல் பிரதிக்கல்விப்பணிப்பாளர் வி.மயில்வாகனம் வலய பொறியியலாளர் ஜி.அருண் ஆகியோரும் கலந்து கொண்டனர்..

அதிதிகளாக காரைதீவு கோட்டக்கல்விப்பணிப்பாளர் பரதன்கந்தசாமி பாடசாலை அபிவிருத்திச்சங்கச் செயலாளர் வி.ரி.சகாதேவராஜா பழைய மாணவர்சங்கச்செயலாளர் வி.விஜயசாந்தன் உதவிக்கல்விப்பணிப்பாளர்களான ஏ.ஏ.சத்தார் எஸ்.இலங்கநாதன் ஆசிரியஆலோசகர்களான எம்.இரவீந்திரன் ஜ.எல்.எம்.இப்றாகிம் ரி.கிருணிவாசன் வி.சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்..

இவ் இல்ல திறனாய்வு போட்டியில்

மருதம் –  448 புள்ளிகளை பெற்று 01 இடம்

முல்லை –  434 புள்ளிகளை பெற்று 02 இடம்

குறிஞ்சி 367 புள்ளிகளை பெற்று 03 இடம்

மருதம் இல்லம் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் இல்லலங்களுக்கு அதிதிகளால் கேடயங்கள் வழங்கப்பட்டது..

 

                                          

  

 

 

மேலதிக படங்களுக்கு  இங்கே அழுத்தவும்