சிறப்பாக நடைபெற்ற சுவாமி விபுலானந்தரின் துறவற தின விழா…

சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணிமன்றத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற சுவாமி விபுலானந்தரின் துறவற தின விழாவின் இரண்டாம் கட்ட நிகழ்வுகள் விபுலானந்த ஞாபகார்த்த மணிமண்டபத்தில் இன்று (10)சிறப்பாக நடைபெற்றது.

கொடியேற்றத்துடன் ஆரம்பமான இரண்டாம் கட்ட நிகழ்வுகளில் விபுலானந்தர் பிறந்த இல்லத்தில் பூஜை ,சுவாமியின் திருவுருவச்சிலைக்கு காவி வஸ்து அணிவித்தல்,மாலை அணிவித்தல்,வேதபாராயணம்,மங்கள ஆராத்தி என்பன இடம்பெற்றன. இன் நிகழ்வில் அதிகளவான மக்கள் கலந்து சிறப்பித்தனர்.

படங்கள்-சியாம்,கிரிஷன்