விபுலானந்தாவின் இல்ல விளையாட்டு விழாவின் மரதன் ஓட்ட நிகழ்வில் மருதம் இல்லம் முதலிடம்

விபுலானந்த மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு விழாவின் இன்றைய(16) மரதன் ஓட்ட நிகழ்வானது சிறப்பாக இடம் பெற்றது. கல்லூரியின் முதல்வர் தலைமையில் இடம் பெற்ற இன் நிகழ்விற்கு கமநல சேவை அதிகாரி சிதம்பரநாதன் மற்றும் நம்பிக்கைஒளி அமைப்பின் தலைவர் கிருஷ்னபிள்ளை ஜெயசிறில் ஆகியோர் பிரதம அதிரியாக கலந்து கொண்டனர்.

12 வீரர்கள் பங்குபற்றிய இவ் மரதன் ஓட்ட நிகழ்வில் மருதம் இல்லம் முதல் மற்றும் மூன்றாவது இடத்தையும் குறிஞ்சி இல்லம் இரண்டாவது இடத்தையும் பெற்றது.இன் நிகழ்ச்சிக்கு பாடசாலை பழையமாணவர்கள் பாடசாலை நலன் விரும்பிகள் என பலரும் ஒத்துழைப்பு வழங்கி இருந்தனர்.

இது வரை முடிவடைந்த நிகழ்ச்சிகளின் ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில்

குறிஞ்சி இல்லம்-42புள்ளிகளுடன் முதலிடம்

மருதம்-41புள்ளிகளுடன் 2ம் இடம்

முல்லை-37புள்ளிகளுடன் 3ம் இடம்

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்