விரைவில் தீர்வு-அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளிடம் அமைச்சர் மனோ கணேசன்

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாகிரக போராட்டம் இன்றுடன் 36வது நாளை எட்டியுள்ளது.

இன்றைய தினம் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகைதந்த அமைச்சர் மனோ கணேசன் உரையாற்றுகையில் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையை எதிர் வரும் பாராளுமன்ற கூட்ட தொடரில் இது பற்றி உரையாற்றுவேன் எனவும் மேலும் ஜனாதுபதி ,பிரதமரிடம் இது பற்றி கலந்துரையாடி இன விகிதாசாரத்திற்கு ஏற்ப தொழில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என கூறிய அவர் உரிய தீர்வை விரைவில் பெற்று தருவதாக உறுதியளித்தார்.