வீரமரணம் அடைந்த தர்மிகனுக்கு சமாதி நிர்மானம்

கடந்த பெப்ரவரி மாதம் 27ம் திகதி சிறைச்சாலை உத்தியோகத்தராக கடமையில் ஈடுபட்டிருந்த வேளை கழுத்துறை சிறைச்சாலை பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த அமரர் சிவானந்தம் தர்மிகன் ஞாபகார்த்தமாக காரைதீவு இந்து மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்த இடத்தில் சமாதி ஒன்று நிர்மானம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இறக்கும் வரை அவர் எமது இணைய குழு ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இன்று அவரது 41ம் நாள் நினைவஞ்சலி ஆகும்.