வீரமுனை இராம கிருஷ்ண மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

கமு/சது/ வீரமுனை இராம கிருஷ்ண மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று (2017.03.03) பாடசாலை அதிபர் S.கோனேசமூர்த்தி தலைமையில் வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழக மைதானத்தில் பி.ப 2.00 மணியளவில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.K.கோடீஸ்வரன் அவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.M.I.M.மன்சூர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

நடைபெற்ற இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் இளங்கோ இல்லம் முதலாம் இடத்தையும் வள்ளுவர் இரண்டாம் இடத்தையும் கம்பர் மூன்றாம் இடத்தையும் பெற்றன.

இதன் போதான படங்களை இங்கே காணலாம்