வீர மக்கள் தின சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வுகள் நாளை காரைதீவில்…

தழிழீழ மக்கள் விடுதலை கழகத்தின்(PLOTE) செயலதிபர் அமரர்.க. உமாமகேஸ்வரன் அவர்களின் 28வது நினைவ தினத்தை முன்னிட்டு PLOTE- DPLF இன் அனுசரணையில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் மென்பந்து சுற்றுப் போட்டியையும் காரைதீவு றிமண்டர் விளையாட்டுக்கழகம் உதைபந்தாட்ட சுற்றப் போட்டியையும் காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டு மைதானத்தில் கடந்த சில தினங்களாக மிகவும் சிறப்பாக நடாத்தி வருகின்றது.

இப் போட்டிகளின் இறுதிப் போட்டி நிகழ்வுகள் 15.07.2017ம் திகதி அதாவது நாளை நடைபெறவுள்ளது. இன் நிகழ்வுகளுக்கு அதிதிகளாக தழிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தாத்தன் அவர்களும் தழிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் உப தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வியாளேந்திரன் அவர்களும் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.