வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலய உற்சவத்தினை முன்னிட்டு ஆன்மீக பாதயாத்திரை

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலய உற்சவத்தினை முன்னிட்டு ஆன்மீக பாதயாத்திரையின் ஐந்தாம் நாள் யாத்திரை இன்று மாங்கேனியில் இருந்து ஆரம்பமானது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் கடந்த செவ்வாய் கிழமை மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமானது.

ஆறு நாட்களை கொண்ட ஆன்மீக பாதயாத்திரை ஞாயிறு மாலை ஆலயத்தை சென்றடைவுள்ளது.

இவ் ஆன்மீக பாதயாத்திரையில் ஐநூறுக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.