வெல்லாவெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவ பெருவிழா!

நீதிதோய் வன்னிமையின் நிகரில் நாதனைநாட்டில் பச்சை போர்த்திய வலயல்நடுவே இச்சாசக்தியாய் வெல்லாவெளி கிராமத்தில் மத்தியில் வீற்றிருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவ பெருவிழா 28.06.2017ம் திகதி ஆரம்பமாகி 09.07.2017ம் திகதி நிறைவு பெறவுள்ளது. இவ்வாலயமானது கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.
ஆரம்ப காலத்தில் சிறுதெய்வ வழிபாட்டில் பத்தினித் தெய்வங்களுக்குரிய வழிபாடானது அகோர பக்தி உணர்வுடன் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக கிராமங்கள் தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் அம்மன் வழிபாடு கிராமிய சிறு தெய்வ வழிபாட்டில் முக்கிய இடத்தை வகிக்கின்றது.

அம்மன் வழிபாட்டில் காவியங்களும், காப்பியங்களும் உடுகு அடித்து மெய் மறந்து உருக்கமான வழிபாட்டின் மூலம் பய பக்தியுணர்வுடன் மேற்கொள்ளப்பட்டு வருவது இதன் சிறப்பாகும்.

திருவிழாவின் போது மெய்யடியார்கள் நேர்த்திகடனை நிறைவேற்றுவதற்காக ஆடல் பாடலுடன் பஜனை பாடுதல், அன்னையர்கள் கற்பூரசட்டி ஏந்தி வருதல், அங்கபுரதட்சனை, காவடியாட்டம், மடிப்பிச்சை எடுத்து வருதல், பால்குட பவனி, தீப்பாய்தல் என்பன இவ்வாயலத்தினுடைய சிறப்பம்சமாகும்.