அருள்மிகு உகந்தமலை ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவம் 2017

வரலாற்றுப்பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகனாலய வருடாந்த ஆடிவேல்விழா மஹோற்சவம் எதிர்வரும்  24/07/2017 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆவணி மாதம் 07/08/2017ஆம் திகதி சமுத்திர தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.

கிழக்கின் தென்கோடியில் நாநிலங்களின் மத்தியில் மனோரம்மியமான சூழலில் அமைந்துள்ள இவ்வாலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் கிரியைகள் யாவும் நடைபெறும்  கொடியேற்றத்திருவிழா வன்று மலைத்திருவிழா மயில்திருவிழா தேர்த்திருவிழா போன்ற சிறப்பு திருவிழாக்கள் நடைபெறும்.அன்றைய தினம் காரைதீவு உகந்தை யாத்திரீகர் சங்கத்தினரின் அன்னதான நிகழ்வு காரைதீவு மடத்தில் இடம்பெறும்.

இதேவேளை உகந்தைமலை முருகனாலயத்திலிருந்து கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை எதிர்வரும் 15ஆம் திகதி திறக்கப்படும்.