15 மணித்தியாலங்களில் 38 இலட்சம் பேரால் பார்க்கப்பட்ட அஜித்தின் விவேகம் டீசர்

அஜித்தின் விவேகம் பட டீசர் வெளியான 15 மணித்தியாலங்களில் 38 இலட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது.

விவேகம் படத்தில் காஜல் அகர்வால், அக்‌ஷராஹாசன், இந்தி நடிகர் விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

அஜித் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டரும் படத்தின் பெயரும் பெப்ரவரி 2 ஆம் திகதி வெளியானது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படம்பிடிக்கப்பட்டதுடன், இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஹங்கேரி நாட்டில் நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட டீசர் இரவு 11 மணிக்கே யூடியூப்பில் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்தது.

15 மணி நேரத்தில் இந்த டீசரை 38 இலட்சத்து 23 ஆயிரம் பேர் இணையத்தளத்தில் பார்த்துள்ளனர்.