2017 பிரதேச செயலக விளையாட்டு விழாவில் KSC சம்பியன்

2017ம் ஆண்டிற்கான காரைதீவு பிரதேச செயலகமட்ட போட்டி நிகழ்ச்சிகளின் இறுதி நிகழ்வான மெய்வல்லுனர் நிகழ்வுகள் இன்று விளையாட்டு உத்தியோகத்தர் ப.வசந்த் தலைமையில் காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டு அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

இன்றய தினம் ஆண் பெண் இருபாலாருக்குமான குண்டு எறிதல்,ஈட்டி எறிதல்,பரிதி வட்டம் வீசுதல்,உயரம் பாய்தல் ,நீளம் பாய்தல்,ஓட்டம்(100,200,400,1500,5000) ஆகிய நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில்

1ம் இடம் காரைதீவு விளையாட்டுக்கழகம் – 240 புள்ளிகள்

2ம் இடம் விவேகானந்தா விளையாட்டுக்கழகம் -104 புள்ளிகள்

3ம் இடம் ரிமைண்டர் விளையாட்டுக்கழகம் -12 புள்ளிகள்

படங்கள் -சியாம்

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்