சிறுநீரகப் பாதிப்பிற்கு என்ன காரணம்..?

சக்கரை நோயும், உணவில் அதிகளவில் பயன்படுத்தப்படும் உப்பு மூலம் அதிகரிக்கும் உயர் குருதி அழுத்தமும் தான் சிறுநீரகப் பாதிப்பிற்கும், சிறுநீரக கோளாறுகளுக்கும் முக்கிய காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்நிலையில் தற்போது உலக வெப்பமயமாதல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஆகிய காரணங்களாலும் சிறுநீரக கோளாறுகள் உருவாகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. எம்முடைய உடலில்உள்ள நீர்ச்சத்தில் சமச்சீரின்மை ஏற்படும் போது, உடல் சோர்வு, தலைச்சுற்றல், நாவறட்சி, மயக்கம், சுயநினைவிழப்பு போன்றவை ஏற்பட்டு சிறுநீரக கோளாறுகள் உண்டாகும். அதனால் வெயிலில் கடினமாக உழைக்கும் விவசாயிகள், கட்டிடத் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் உள்ளிட்டவர்கள் அதிக அளவில் தண்ணீரைப் பருகவேண்டும். அதே சமயத்தில் பெரும்பாலானவர்கள் தாங்கள் பணியாற்றும் இடங்களில் கிடைக்கும் பாதுகாப்பற்ற அல்லது சுகாதாரமற்ற தண்ணீரைத்தான் அருந்துகிறார்கள். இதனால் சிறுநீரகங்கள் பாதிப்பிற்குள்ளாகும். அதே போல் வேலைக்கு செல்லும் பெண்கள், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் முதியவர்கள்,…

Read More

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மீண்டும் போராட்டம்!!

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதில் அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் வேலையற்ற பட்டதாரிகளின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக  விஷேட கலந்துரையாடலும்  கூட்டமும் மனிதச்சங்கிலி போராட்டமும்  09 திகதி காரைதீவு சுற்றுவட்டத்திற்கு அருகாமையில் நடைபெற்றது. இதன் போது அகில இலங்கை பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் சங்கைக்குரிய தன்னே ஆனந்த தேரர் மற்றும் அம்பாறை முஸ்லீம்  வேலையற்ற பட்டதாரிகளின் தலைவர் ஏ.ஜசீர் ஆகியோர் அடங்கலாக பலரும் கலந்து கொண்டது. இதன் போது கருத்துத் தெரிவித்த அகில இலங்கை பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் சங்கைக்குரிய தன்னே ஆனந்த தேரர் எதிர்வரும் தேர்தலில் முன்னர் பட்டதாரிகள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் அப்படி வழங்காவிட்டால் நாம் தேர்தலை முற்றிலும் புறக்கணிக்கப்போவதாகவும் இதனை உடனடியாக மத்திய அரசும் மாகாண அரசும் மிகவும் விரைவில் தீர்மானத்தை பெற்றுத்தரும்படியும் தெரிவித்தனர்.  

Read More

வவுனியாவில் வீடு புகுந்து திருட்டு மோப்பநாயின் உதவியுடன் பொலிசார் தீவிர தேடுதல்.

வவுனியா குருமன்காடு, கரப்பன்காட்டில் நேற்று இரவு இரு வீடுகளில் புகுந்த திருடர்கள்  அங்கு தமது கைவரிசையைக்காட்டியுள்ளனர். இதையடுத்து இன்று பொலிசார் சம்பவ இடத்தில் மோப்பநாயின் உதவியுடன் தீவிர தேடுதலை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More