வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 31வது நாளை தாண்டியும் தொடர்கிறது!

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று புதன்கிழமை 31வது நாளாக தொடர்ந்து காரைதீவில் சத்தியாக்கிரகப் போராட்டத்திலீடுபட்டனர்.   ஒரு மாத காலத்தைப் பூர்த்தி செய்த அவர்கள் இன்று மீன்பிடிக்கின்ற அத்தாங்கு சகிதம் காணப்பட்டனர். கூடாரத்தின் வெளியே பட்டதாரியொருவர் வெருளி வடிவில் கட்டப்பட்டிருந்தது.   அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று புதன்கிழமை 31வது நாளாக தொடர்ந்து காரைதீவில் சத்தியாக்கிரகப் போராட்டத்திலீடுபட்டனர்.       ஒரு மாத காலத்தைப் பூர்த்தி செய்த அவர்கள் இன்று மீன்பிடிக்கின்ற அத்தாங்கு சகிதம் காணப்பட்டனர். கூடாரத்தின் வெளியே பட்டதாரியொருவர் வெருளி வடிவில் கட்டப்பட்டிருந்தது.     சில பட்டதாரிகள் அவர்களது குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தனர். இன்று எந்த முன்னேற்றமும் தென்படவில்லை என அம்பாறை மாவட்ட வேலையற்றபட்டதாரிகள் சங்கத் தலைவர் ஏ.எச். ஜெசீர் தெரிவித்தார்.   காரைதீவு விபுலானந்த சதுக்கமருகே மூவின பட்டதாரிகளும்…

Read More

டெங்கு என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?

டெங்கு என்றால் என்ன? ஏடிஸ் என்னும் கொசுவினால் பரவக்கூடிய ஒரு வைரஸ் கிருமியால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த வகைக் கொசு, மற்ற கொசுக்களைப் போலல்லாமல், பகல் வேளைகளில்தான் கடிக்கின்றது. உலகெங்கிலும் ஆண்டுக்கு 6 கோடி பேர் இதனால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 24,000 பேர் இதனால் இறக்கின்றனர் ஆப்ரிக்கா அமெரிக்கா, கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதி, தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகளில் உள்ள சுமார் 100 நாடுகளில் இது காணப்படுகிறது. அறிகுறிகள்   தலைவலி காய்ச்சல் தோலில் தடிப்புகள் உடம்பு வலிகள் இந்த அறிகுறிகள் 2-3 நாட்களுக்கு நீடிக்கலாம் இந்த நோய் தாக்கிய ஒருவருக்கு சுமார் மூன்று மாதங்கள் களைப்பாக உணர்வர். ஆனால் பொதுவாக இதற்கு சிகிச்சை தேவைப்படாது.   டெங்கு நோய் பீடித்தால் மரணம் உறுதியா? குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் வயது வந்தவர்களையும் பாதிக்கும் இந்நோய், பொதுவாக…

Read More

தெற்காசியாவில் இரண்டாவது செலவுகூடிய நகரமாக கொழும்பு தெரிவு

தெற்காசியாவில் இரண்டாவது செலவுகூடிய நகரமாக கொழும்பு தெரிவு   தெற்காசிய நாடுகளில் உள்ள இரண்டாவது செலவுகூடிய நகரமாகவும் உலகில் 108 ஆவது நகரமாகவும் கொழும்பு தெரிவாகியுள்ளது.   பொருளாதார புலனாய்வுப் பிரிவு (Economist Intelligence Unit) மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.   தெற்காசியாவில் செலவுகூடிய நகரங்களின் பட்டியலில் டாக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன், மூன்றாம் இடத்தை காத்மண்டு பிடித்துள்ளது.   பொருளாதார புலனாய்வுப் பிரிவின் இந்த ஆய்வில் புதுடெல்லி, சென்னை, மும்பை, கராச்சி, பெங்களூர் ஆகிய 8 தெற்காசிய நகரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.   இந்த கணக்கெடுப்பு உலகின் 133 நகரங்களின் 160 பொருட்களுக்கான 400க்கும் மேற்பட்ட விலை ஒப்பீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   இதில் உணவு, நீர், ஆடை, வீட்டுத்தளபாடங்கள், தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்கள், வீட்டு வாடகை, போக்குவரத்து செலவு, பயன்பாட்டுக் கட்டணங்கள், தனியார்…

Read More

3 பேரிச்சம் பழம் சாப்பிடுங்கள்: 12 நாட்களில் இவ்வளவு மாற்றம் நடக்குமா?

பேரிச்சம் பழத்தில் காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, விட்டமின் B6, மெக்னீசியம் போன்ற அனைத்து விதமான ஊட்டச்சத்துள் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே தினமும் 3 பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால், வெறும் 12 நாட்களில் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் இதோ! பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்   பேரிச்சம் பழத்தில் விட்டமின் மற்றும் புரதச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால், இது உடல் எடையை குறைத்து, உடலின் வலிமையை அதிகரிக்கச் செய்கிறது. தினமும் 3 பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வருவதால், மூளையின் செயல்பாடு மேம்படும். அதோடு ஞாபக சக்தி, கூர்மையான புத்தி, கற்கும் திறன் போன்றவை அதிகரிக்கும். பேரிச்சம் பழத்தை தினமும் 3 சாப்பிட்டு வந்தால், அது சீரற்ற குடலியக்கம், மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஆகியவற்றிற்கு தீர்வளித்து, குடல் புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கிறது. கர்ப்பிணி…

Read More

இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் 8000 இற்கும் அதிக மாணவர்கள் 9 பாடங்களில் A சித்தி

நேற்று வெளியாகிய கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் 8224 மாணவர்கள் 9 பாடங்களில் A சித்தி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.   கடந்த வருடம் 6102 மாணவர்களே 9 பாடங்களிலும் A சித்தி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.   இதேவேளை, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் கணித பாடத்தில் சித்தியடைந்தோர் 7.63 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.   அத்துடன் வரலாறு பாடத்தில் 80.75 வீதமானோர் சித்தியடைந்துள்ளனர்.   வெளியாகியுள்ள பெறுபேறுகளுக்கு அமைய உயர்தர வகுப்பிற்கு தோற்றுவதற்கு 69.94 வீதமானோர் தகுதி பெற்றுள்ளனர்.   கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 0.61 வீதம் இந்த வருடம் உயர்தர வகுப்பிற்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலவச மின்சார இணைப்பினை வழங்க ஒப்பந்தம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களுக்கு இலவசமாக மின்சாரத்தினைப் பெற்றுக்கொடுப்பதற்கு மாலைத்தீவின் Renewable energy Maldives நிறுவனத்துடன் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் இன்று ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது.     இந்த ஒப்பந்தத்தில் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் மாலைத்தீவின் Renewable energy Maldives நிறுவனத்தின் தலைவர் இப்ராஹீம் நஸீட் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.     இந்த ஒப்பந்தத்தின் மூலம், மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற பிரதேசங்களை இணங்கண்டு அங்குள்ள வீடுகளுக்கு இலசவமாக சூரிய மின்கலங்களை (solar panels) இந்த நிறுவனம் வழங்கவுள்ளது. அதில் உற்பத்தி செய்யப்படும் மின் சக்தி குறித்த வீட்டின் பயன்பாட்டுக்கும் வழங்கப்படவுள்ளது.     அத்துடன், சூரிய மின்கலங்கள் பொறுத்தப்படும் சிறிய வீடுகளுக்கு 1500 ரூபாவும், பெரிய…

Read More

பொத்துவில் தமிழர்களின் காணிகளை சுவிகரிக்கும் முயற்சி தடுத்து நிறுத்தம்!

பொத்துவிலில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான பூர்வீக காணிகளை சுவிகரிக்க  மேற்கொள்ளப்பட்ட முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.   பொத்துவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் பொத்துவில் பிரதேச செயலக மண்டபத்தில் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான பைசால் காசிம் தலைமையில் இன்று நடைபெற்றது.   இதன்போது பொத்துவில் பிரதேசத்தில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான  காணிகளைப்  பெற்று அவற்றில் பொது விளையாட்டு மைதானமும், பஸ் நிலையமும் அமைப்பதற்கு பிரேரணை கொண்டுவரப்பட்டது.   ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பங்குபற்றியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்பு இணைத்தலைவருமான க. கோடிஸ்வரன், மற்றும் மாகாண சபை உறுப்பினர் த. கலையரசன் ஆகியோர் தங்கள் நியாயங்களை முன்வைத்து கடும் எதிர்ப்பைக் தெரிவித்தனர் இதனால்   அங்கே கடும் வாக்குவாதமும் ஏற்பட்டது.   தமிழர்களின் சொந்த காணிகளை…

Read More

க.பொ.த.சாதாரண தர முடிவுகள் வெளியானது !பெறுபேறுகளை இங்கே பெறமுடியும்…

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் சற்று நேரத்திற்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. www.dornets.lk என்ற பரீட்சை திணைக்களத்தின் இணைத்தளத்தில் பரீட்சை முடிவுகளை அறிந்து கொள்ள முடியும் எனவும் திணைக்களம் கூறியுள்ளது. இதேவேளை, உங்கள் பெறுபேற்றை கையடக்க தொலைபேசியின் ஊடாக பார்க்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் உங்கள் மொபைல் போன்களில் EXAMS என ரைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு Index Number ஐ ரைப் செய்து, Dialog எனில் 7777 என்ற இலக்கத்திற்கும் Mobitel எனில் 8884 என்ற இலக்கத்திற்கும் Airtel எனில் 7545 என்ற இலக்கத்திற்கும் Etisalat எனில் 3926 என்ற இலக்கத்திற்கும் Hutch எனில் 8888 என்ற இலக்கத்திற்கும் SMS அனுப்புவதன் மூலம் உங்கள் கைகளில் தவழும் மொபைல் போன்களில் பரீட்சைப் பெறுபேற்றைப் பெற்றுக்கொள்ள…

Read More

இலங்கையின் முதல்தர திரையரங்கு மட்டக்களப்பில் திறந்துவைப்பு!

இலங்கையிலேயே அதி சொகுசான அதிக கலையம்சம் கொண்ட திரையரங்கு ஒன்று மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.   நேற்று இரவு மட்டக்களப்பு அன்னை செல்லம் திரைப்படமாளிகை என்னும் பெயரில் இந்த திரையரங்கு திறந்துவைக்கப்பட்டது.   இலங்கையின் திரைப்படமாளிகை வரலாற்றில் அழகிய முறையிலும் குடும்பமாக இருந்து பார்க்ககூடிய வகையிலான இருக்கை வசதிகளையும் கொண்டதாக இந்த திரையரங்கு அமைந்துள்ளது.   செல்லம் திரையரங்குகளின் தலைவர் க.மோகனின் தலைமையில் நடைபெற்ற இதன் திறப்பு விழாவில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி பிரதம அதிதியாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டனர்.   இந்த நிகழ்வில் இலங்கை திரைப்படக்கூட்டுத்தாபனத்தின் பொதுமுகாமையாளர் உட்பட திரைப்படகூட்டுத்தாபன உத்தியோகத்தர்கள்,கலைஞாகள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.   இலங்கையிலேயே அதிசொகுசானதாகவும் அழகிய முறையில் அமைக்கப்பட்டதாகவும் இந்த திரையரங்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More