பாம்பு கடித்தால் உடனடியாக செய்ய கூடாதவை

பாம்பு என்றாலே அனைவருக்கும் பயம் தான், அதிலும் பாம்பு கடித்துவிட்டால் பயத்திலேயே சிலருக்கு உயிரே போய்விடும். பாம்பு கடித்தவுடன் பதட்டத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டும் யோசிப்பதில்லை. பாம்பு கடித்தவுடன் செய்ய வேண்டியவை பாம்பு கடித்தவுடன் அந்த இடத்திற்கு மேலாக லேசாக கட்ட வேண்டும். இறுக்கி கட்டிவிட்டால் அந்த இடத்தில் விஷம் நின்று அந்த இடம் அழுகுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கடிப்பட்டவர் பதட்டமடையாமல் இருக்கவேண்டும். பதட்டமடையும் போது இரத்த ஓட்டம் அதிகமாகி விஷம் எளிதில் உடல் முழுதும் பரவிவிடும். கடிபட்டவரை நடக்கவிடக்கூடாது. உடல் குலுங்கும்படி தூக்கக்கூடாது. மெதுவாக தான் கையாள வேண்டும். பாம்பு கடித்த இடத்தில் இருந்து உயரமான இடத்தில் இதயம் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். மருத்துவமனைக்கு செல்லும் போது படுக்க வைத்தே அழைத்து செல்லவேண்டும். பாம்பு கடிக்கு அரசு மருத்துவமனையே சிறந்தது. சிகிச்சை அளிப்பதற்கு…

Read More

ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்

மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதேசத்தில் ரயிலில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.   இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற இவ் விபத்தில் சத்துருக்கொண்டான் பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய துரையப்பா என்பவரே உயிரிழந்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர் கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்குச் சென்று கொண்டிருந்த குறித்த ரயில் நேற்று அதிகாலை 5:15 மணியளவில் ஏறாவூர் ரயில் நிலையத்தை அண்மித்தபோது இவ் விபத்து நேர்ந்துள்ளது. குறித்த வயோதிபர் தண்டவாளத்தில் பயணித்தமை காரணமாகவே இவ் அனர்த்தம் நேர்ந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

பிறந்த நாள் வாழ்த்து- க.சசிகாந்த்

காரைதீவை சேர்ந்த எமது காரைதீவு.எல்கே இணைய குழுவின் சிரேஸ்ட உறுப்பினருமாகிய ​ செல்வன்.கனகசுந்தரம் சசிகாந்த் அவர்கள் தனது 25வது பிறந்த தினத்தை இன்று (28) விமர்சியாக கொண்டாடுகின்றார். இவர் சீரும் சிறப்புடனும் வாழ குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து காரைதீவு.எல்கே இணைய குழு சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.

Read More

கிராம சேவையாளர் பதவிக்கான 2000 வெற்றிடங்கள் !

கிராம சேவையாளர் பதவிக்கான 2000 வெற்றிடங்கள் நிலவுவதாக அரச முகாமைத்துவம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.  கிராம சேவையாளர்களுக்கான போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியானதன் பின்னர் குறித்த வெற்றிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.   எனினும் தற்போது நிலவும் வெற்றிடங்களுக்கு, குத்தகை ரீதியில் கிராம சேவையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் விரைவில் நாடளாவிய ரீதியில் காணப்படும் கிராம சேவையாளர்களுக்கான வெற்றிடங்களுக்கு தகுந்த நபர்கள் தெரிவு செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Read More

மனிதர்களுக்கு நிரந்தர குளிர்ச்சியை தரும் புங்கன் மரம்.

புங்கை அல்லது புங்கு என்னும் இத்தாவரம் வெப்பமண்டலப் பகுதிகளா ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. இன்று மாநகரங்கள், நகரங்கள் மட்டுமல்ல, கிராமங்களில்கூட கொன்கிரீட் வீடுகள் அதிகரித்துவிட்டதால், சமூக காடுகள் குறைந்து நகரம், கிராமங்கள் யாவும் ‘கொன்கிரீட்’ காடுகளாகிவிட்டன. சமூக காடுகள் குறைந்ததால், வளிமண்டலத்தில் உள்ள காற்று மாசு அடைந்ததோடு, அதீத வெப்பமும் அடைந்திருக்கிறது. இயற்கை மீது நாம் இஷ்டத்திற்கு ‘கை’ வைத்ததால், இப்போது கடும் வறட்சி, பருவம் தவறிய மழை, அதிக பனிக்காற்று, அதிகமான வெயில் என்று பல பாதிப்புகளால் இயற்கை நம்மை பதம் பார்க்க ஆரம்பித்திருக்கிறது. எனவே, இனியும் இயற்கையை சீண்டாமல், நம்மால் முடிந்த அளவிற்கு வீடு, தெருக்களில் ‘புங்கன்’ வளர்த்து குறைக்கலாம். கொன்கிரீட் வீடுகளாலும், அவற்றில் இருந்து வெளியேறும் வேதியல் கூறுகளாலும், மரங்களை அழித்ததாலும் காற்று வெப்பமடைந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் வாகனங்களின் புகையால் காற்றின்…

Read More

மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் நான்கு சிசுக்களை பிரசவித்த தாய்

ஒரே பிரசவத்தில் நான்கு சிசுக்கள் பிரசுவித்த சம்பவம் ஒன்று நேற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. பொத்துவில் தாமரை குளத்தை சேர்ந்த உதயபானு ஐங்கரன் எனும் தாயே இவ்வாறு 4 பிள்ளைகளை பிரசுவித்துள்ளார் நேற்று அதிகாலை 4 மணியளவில் 3 பெண் குழந்தைகளும் 1 ஆண் குழந்தையும் பிரசுவித்துள்ளார். ஏற்கனவே இரு ஆண்பிள்ளைகள் இருப்பதாகவும் தற்போது 4 பிள்ளைகள் பிரசுவித்துள்ளதால் தனக்கு பாரிய பொருளாதார சுமை ஏற்பட்டுள்ளதாக பிள்ளைகளின் தந்தை தெரிவித்துள்ளார். இருப்பதற்கு கூட சரியான வசதியின்மையால் தங்களுக்கு உதவி செய்யுமாறு பிள்ளைகளின் தந்தை தெரிவித்துள்ளார். தகப்பன் – இ. ஐங்கரன் -‎776412160  

Read More

நடிகர் வினுசக்ரவர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்

நடிகர் வினுசக்கரவர்த்தி (74) காலமானார்..1002 படங்களில் நடித்த பிரபல நடிகரான இவர் சுமார் 3 ஆண்டுகளாக உடல் நலமின்றி இருந்த அவர் இன்று மாலை 7 மணியளவில் மரணம் அடைந்தார்..அவரது மனைவி பெயர் கர்ணப்பூ…அவருக்கு சரவணன் சண்முகப்பிரியா என்கிற மகன் மகள் உள்ளனர்.

Read More

மரண அறிவித்தல்- அமரர். பொன்னையா சிவநாதன்.

காரைதீவு 2ம் பிரிவை சேர்ந்த  ஓய்வு பெற்ற  ஆங்கில ஆசிரியர்  பொன்னையா சிவநாதன் அவர்கள் 26.4.2017  புதன்கிழமை அன்று  இரவு காலமானார்.

Read More

பாடசாலைகள் இன்று ஆரம்பம்

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக அரசாங்கப் பாடசாலைகள் இன்று ஆரம்பமாகின்றன.     பாடசாலை சுற்றாடலை பாதுகாப்பதை உறுதி செய்து, பாடசாலை தவணை ஆரம்பமாவதுடன் அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு அனைத்து அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளை வெப்பமான காலநிலை காரணமாக ஏற்படும் சிரமங்களைத் தவிர்த்துக் கொள்வதற்கhக மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பிலும் அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்கள்’வழங்கப்பட்டுள்ளன. அனைத்து பாடசாலைகளிலும் குப்பைகள் மற்றும் நுளம்புகள் இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொடர்ந்தும் பாதுகாப்பான முறையில் பாடசாலை சுற்றாடலை முன்னெடுக்கும் பொறுப்பு அதிபர்களுக்கு இருப்பதாக அமைச்சு வலியுறுத்தியுள்ளது.   வெப்பமான காலநிலை காரணமாக ஏற்படும் சிரமங்களைத் தவிர்த்துக் கொள்வதற்கு மாணவர்களை திறந்த வெளிகளில் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் நீரை பெருமளவில் அருந்தச் செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. குடை,…

Read More