முடிவுக்கு வந்தது 33 வருட சகாப்தம்… மிஸ் யூ அண்டர்டேக்கர்!

`தி அண்டர்டேக்கர்’, உலகெங்கிலும் உள்ள ரெஸ்ட்லிங் ரசிகர்களின் மனதில் ஆழப்பதிந்திருக்கும் பெயர். அதை செய்ய கிட்டதட்ட 33 ஆண்டுகள் உதிரம் சிந்தி, எலும்புகள் நொறுங்க, சதை கிழிந்து சண்டை போடவேண்டியிருந்தது மார்க் காலவேவுக்கு. 1965 ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் வசித்துவந்த ஃபிரான்ட் காம்ப்டன் காலவேவுக்கு ஐந்தாவது ஆண் குழந்தையாக பிறந்தான் மார்க் காலவே. சிறுவயதில் இருந்தே விளையாடுவதில் அவனுக்கு பெரிதளவில் ஆர்வம் இருந்தது. கடைக்குட்டி மார்க் காலவேவுக்கு தனது நான்கு அண்ணன்களுடன் இணைந்து விளையாடுவது தான் ஒரே பொழுதுபோக்கு. தனது பள்ளியின் கால்பந்து மற்றும் கூடைப்பந்து அணிகளிலும் நட்சத்திர ஆட்டக்காரனாக வலம் வந்தான். ஆறே முக்கால் அடி உயரமும் ஒல்லியான தேகமும் கூடைபந்து விளையாட்டில் பெரும் பக்கபலமாய் அமைய, நிறைய விளையாடி, நிறைய வென்றான். அந்த தகுதி, ஏஞ்சலினா கல்லூரியில் பட்டப்படிப்பு பயிலும் வாய்ப்பையும்…

Read More