ஆப்பிள், சாம்சங்கை பின்னுக்குத் தள்ளி ஜியோமி முதலிடம்

இந்தியர்கள் அதிகம் விரும்பி வாங்கும் ஸ்மார்ட் போன்களில் ஜியோமி முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆப்பிள், சாம்சங் போன்ற பெரிய மொபைல்போன் நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி ஜியோமி முதலிடத்தைப் பிடித்துள்ளது. கலர் மொபைல், கேமரா மொபைல், டச் மொபைல் என்ற பரிமாணங்களைக் கடந்து மொபைல் உலகம் ஸ்மார்ட் போன் உலகில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட் போன்களில் இந்தியாவைப் பொறுத்தவரையில் சாம்சங், ஆப்பிள், ஓப்போ, லாவா, ஹூவாய், ரெட்மி போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்கள் முக்கிய இடத்தைப் பெற்று இருக்கின்றன. இந்த ஸ்மார்ட் போன்களில் ஆப்பிள் போன்களின் விலை மிக அதிகமாகவும், சாம்சங்கின் ஸ்மார்ட் போன்கள் விலை அதிகமாகவும் இருந்து வருகின்றன. ஓப்போ, லாவா, ரெட்மி, போன்ற மொபைல்களின் விலைகள் நடுத்தர மக்களுக்கு ஏற்ற வகையில் இருந்து வருகின்றன. இந்நிலையில் 2017-ம் ஆண்டுக்கான ஸ்மார்ட் போன்கள் விற்பனை குறித்த ஆய்வு அறிக்கை வெளிவந்துள்ளது. அதன்படி 2017-ம் ஆண்டில் ஜியோமி…

Read More

கண்ணகி அம்மன் ஆலய அலங்கார உற்சவத்தின் சப்புற திருவிழா – Part 2

காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பங்குனி உத்தர அலங்கார உற்சவம் சிறப்பாக நடை பெறுகின்ற தருவாயில் அதன் ஓரங்கமான சப்புறத்திருவிழாவானது இன்று சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது. பிற்பகல் வேளையில் பூசை வழிபாடுகள் இடம்பெற்று உள்வீதி தேர் உலாவின் பின்னர் அலங்கரிக்கப்பட்ட முத்துசப்புரங்கள் காரைதீவின் தேரோடும் வீதி வழியாக வலம் வருகின்றன. இதன்போதான படங்களை காணலாம்.                               

Read More

லீக் போட்டியில் விவேகானந்தா விளையாட்டு கழகம் வெற்றி

இம்ரான் விளையாட்டு கழகம் நடத்தும் 2017 ம் ஆண்டுக்குஉரிய( Ipl ) தொடரின் மற்றும் ஒரு போட்டி இன்று நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் விவேகானந்தா விளையாட்டுக்கழகம் மற்றும் நிந்தவூர் லகான் விளையாட்டுக்கழகம் ஆகியன மோதின. இப் போட்டியில் 14 ஓட்டங்களால் விவேகானந்தா விளையாட்டு கழகம் வெற்றி பெற்றது. ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய விவேகானந்தா அணியினர் 20 பந்து வீச்சு ஓவர்களில் 169 ஓட்டங்களுக்கு 7விக்கெட்களை இழந்தனர். துடுப்பாட்டத்தில் கஜேந்திரா 53 டினஸ்ரன் 30 ஓட்டங்களையும் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லகான் 155 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 14 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது. பந்து வீச்சில் டினஸ்ரன் 4 விக்கட் கைப்பெற்றினார் . இன்றைய போட்டியின் சிறப்பாட்ட வீரராக 53 ஓட்டங்களையும் 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றிய கஜேந்திரா தெரிவானார். தகவல்-விவேகானந்தா விளையாட்டு கழகம்…

Read More

புற்றுநோயை குணமாக்குகிறது தேன்” – விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு!

தேனை பயன்படுத்தி புற்றுநோய் புண்களை குணமாக்க முடியுமென்று மேற்கு வங்க மாநில ஐ.ஐ.டி., விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கரக்பூர் ஐ.ஐ.டி.,யின் ரசாயன விஞ்ஞானிகள், பயோ தொழில் நுட்பவியலாளர்கள், மருத்துவர்கள் ஆகியோர் அடங்கிய குழு இந்த ஆராய்ச்சியை செய்துள்ளது.   ‘வாய் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் புண்களில் இந்த பட்டையை ஒட்டும்போது புண்கள் வேகமாக குணமாவதுடன் மீண்டும் அந்த நோய் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறார் இந்த குழுவின் ஆராய்ச்சியாளரான நந்தினி பந்தரு.புற்றுநோயை குணமாக்கும் அளவுக்கு தேனில் விஷயம் இருக்கிறதா என்று ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகனிடம் கேட்டோம்…   ‘‘சுக்ரோஸ், ஃப்ரக்டோஸ், கார்போஹைட்ரேட் மற்றும் பல்வேறு நொதிகள் தேனில் உள்ளது. இந்த நொதிகளும், மற்ற சத்துக்களும் வாய்புற்றுநோய் புண்களை மட்டுமல்ல உடலில் எங்கு புண் ஏற்பட்டாலும் குணப்படுத்தும் ஆற்றலுடையது. தசைகள், எலும்புகள், கொழுப்பு மற்றும் உடல்…

Read More

பிறந்தநாள் வாழ்த்து- ப.ரஜரன்

காரைதீவு 1ம் பிரிவை சேர்ந்த திரு.திருமதி.பத்மநாதன் தம்பதிகளின் செல்வப்புதல்வன் செல்வன்.ப.ரஜரன் அவர்கள் தனது 21வது பிறந்த தினத்தை தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேற்று கொண்டாடினார். இவர் சீரும் சிறப்புடனும் வாழ குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து காரைதீவு.எல்கே இணைய குழு சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம். மேலதிக படங்களுக்கு  இங்கே அழுத்தவும்

Read More