இன்று கல்முனையில் சித்திரைப்புத்தாண்டு விளையாட்டுவிழாவும் களியாட்டநிகழ்வும்!

சித்திரைப்புத்தாண்டினை முன்னிட்டும் கழகத்தின் 33வது வருட நிறைவினைக்குறிக்குமுகமாகவும் கல்முனை நியூஸ்டார் விளையாட்டுக்கழகம் கல்முனையில் சித்திரைப்புத்தாண்டு விளையாட்டுபோட்டியையும் களியாட்டநிகழ்வையும் இன்று ஞாயிற்றுக்கிழமை நடாத்தவுள்ளது. இவ்விழாவிற்கு பிரதமஅதிதியாக பாராளுமன்றகுழுக்களின் பிரதித்தலைவரும் வன்னி.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கலந்துசிறப்பிக்கவுள்ளார். கௌரவஅதிதிகளாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினரும் தமிழீழ விடுதலைக்கழகத்தின் உபதலைவருமான ஹென்றி மகேந்திரன் கிழக்குமாகாணசபை உறுப்பினர் முரு.இராஜேஸ்வரன் கல்முனை ஆதாரவைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் பிரதி அத்தியட்சகர் டாக்டர் சாமி.இராஜேந்திரன் கல்முனை தமிழ்ப்பிரதேச செயலாளர் கந்தையா லவநாதன் இலங்கை மின்சாரசபையின் கல்முனை மின்அத்தியட்சகர் ஜ.தி.சம்பந்தன் சிரேஸ்ட்ட சட்டத்தரணி நடராஜா சிவரஞ்சித் உள்ளிட்டோர் கலந்துசிறப்பிப்பார்கள். சந்திரசேகரம் ராஜன் அனுசரணை வழங்குகின்றார். 15ஆம் 16ஆம் திகதிகளில் கல்முனை நியூஸ்ரார் விளையாட்டுக்கழக மைதானத்தில் இப்புத்தாண்டுவிழா இடம்பெறும். நேற்று 15ஆம் திகதி சனிக்கிழமை காலை 7மணிக்கு 13வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி இடம்பெற்றது. இன்று 16ஆம்…

Read More

தாய்ப்பால் புரைக்கேறி சிசு பலி!

மட்டக்களப்பு, ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள ஏறாவூர் நகரப் பகுதியில் இரண்டரை மாத சிசு, தாய்ப்பால் புரைக்கேறியதன் காரணமாக உயிரிழந்திருப்பதாக, ஏறாவூர் ஆதார வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏறாவூர் பழைய சந்தை வீதியைச் சேர்ந்த சலீம் பாத்திமா சபா எனும் பெண் சிசுவே, நேற்றிரவு (15) 10.30 மணியளவில் இவ்வாறு உயிரிழந்துள்ளது. சிசுவுக்கு, தாய் பாலூட்டியதன் பின்னர் தாயும் சேயும் தூக்கத்தில் இருந்துள்ளனர். நள்ளிரவுக்குச் சற்றுப் பிந்தி தாய் தூக்கம் கலைந்து கண் விழித்து சிசுவைப் பார்த்ததும் சிசு அசைவற்றுக் காணப்பட்டுள்ளது. உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் சிசு ஏற்கெனவே இறந்து விட்டிருந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது. உடற் கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை…

Read More

மட்டக்களப்பில் ஓய்வூதியக் கொடுப்பனவை வலியுறுத்திய சைக்கிள் பயணம்!

இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட சகல பிரஜைகளுக்கும் ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் முன்னெடுத்துள்ள சைக்கிள்; பயணத்தின் மூலம் அவர் மட்டக்களப்பு நகரை இன்று (16) வந்தடைந்தார். மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின்; பிரதிநிதிகளும்  எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் பிரதிநிதிகளும் இவரை காந்தி பூங்காவுக்கு முன்பாக  வரவேற்றதுடன், மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் பொருளாளர் வி.ரஞ்சிதமூர்த்தி மற்றும் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தலைவர் ஓ.கே.குணநாதனும் இவருக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர். 60 வயதுக்கு மேற்பட்ட சகல பிரஜைகளுக்குமான ஓய்வூதியக் கொடுப்பனவை வலியுறுத்திய 1,515 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட சாதனைப் பயணத்தை  தர்மலிங்கம் பிரதாபன் கடந்த 8ஆம் திகதி  வவுனியாவிலிருந்து ஆரம்பித்து, 9ஆவது நாளாகிய நேற்று மட்டக்களப்பு வந்தடைந்தார்;. இதனை அடுத்து, இங்கிருந்து அவர்  திருகோணமலைக்குப் பயணமாகின்றார். கிளிநொச்சி,  யாழ்ப்பாணம், மன்னார்,…

Read More

சனிக்கிரகத்தில் உயிர்கள் இருக்கலாம்: நாசா கண்டுபிடிப்பு

பூமிக்கு வெளியே உயிர்கள் வாழ்வதற்கு வாய்ப்புள்ள மிகச்சிறந்த இடமாக,, சனிக்கிரகத்தின் நிலவுகளில் ஒன்றான என்சலடஸ் இருக்கலாம் என்று வானியலாளர்கள் அறிஉவித்துள்ளனர். தனது பதின்மூன்று ஆண்டு பயணத்தின் இறுதி நிலையில் இருக்கும் கசினி என்கிற நாசாவின் விண்ணோடம், இந்த சனிக்கிரகத்து நிலவின் மேற்பரப்பிலிருந்து பீறிட்டு அடிக்கும் தண்ணீரை கண்டறிந்துள்ளது. அதனடிப்படையில் உயிர்கள் வாழ ஏதுவான சூழல் அங்கு நிலவக்கூடும் என்கிற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.

Read More