பொலிஸாரின் காக்கி நிற சீருடைக்குப் பதிலாக, கடும் நீல நிற சீருடை !

பொலிஸார் தற்போது அணியும் காக்கி நிற சீருடைக்குப் பதிலாக, கடும் நீல நிறத்திலான சீருடை வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்தார்.   எல்ல பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.   உலகிலுள்ள அதிகமான பொலிஸாரின் சீருடைகள் நீல நிறத்தில் உள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.   பொலிஸ் திணைக்களத்தில் மாற்றமொன்றினை ஏற்படுத்துவதற்கு தாம் தீர்மானித்ததாகவும், அதற்கிணங்க பொலிஸாரின் சீருடையை கடும் நீல நிறமாக மாற்றவுள்ளதாகவும் அவர் கூறினார்.   இந்த மாற்றம் மிக விரைவில் அமுலுக்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.   இந்த மாற்றமானது, பொலிஸ் திணைக்களத்தினை வேறு திசை நோக்கிக் கொண்டு செல்லுமெனவும் பொலிஸ் மா அதிபர் நம்பிக்கை தெரிவித்தார்.

Read More

தடைப்பட்டிருந்த எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் வழமைக்கு.

பெற்றோலிய தொழிற் சங்கங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக தடைப்பட்டிருந்த எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக பெற்றோலிய அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.   எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் இன்று (25) பகல் அளவில் சீராக முன்னெடுக்கப்படும் என அமைச்சர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.   பெற்றோலிய ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்குவது தொடர்பில், பிரதமரின் செயலாளரினால் எழுத்துமூலம் வாக்குறுதி வழங்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.   பெற்றோலிய துறை தொடர்பாக இந்தியாவுடன் முன்னெடுக்கப்படும் உடன்படிக்கை அரசியல் ரீதியானது என்றும், அதுதொடர்பான உடன்படிக்கையில் ஈடுபட முன்னர் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய தரப்புகளுடன் கலந்துரையாடப்படும் எனவும் பிரதமரின் செயலாளர் உறுதியளித்துள்ளார்.     ஹம்பாந்தோட்டை களஞ்சிய தொகுதி சம்பந்தமாகவும் தொழிற் சங்கங்களின் யோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கான கலந்துரையாடலை நடத்துவதற்கும், ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் அமைச்சரவை உபகுழுவுடன் பேச்சுவார்தை நடத்துவதற்கான சந்தர்ப்பத்தை…

Read More