போரதீவு பாரதி வித்தியாலய மாணவி தமிழ் மொழித்திப்போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு

(எஸ்.ஸிந்தூ) பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட போரதீவு பாரதி வித்தியாலயத்தில் இருந்து தமிழ் மொழித்திப்போட்டியில் மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தினை பெற்ற கருணாகரன் அபிராமி 4ம் பிரிவு கட்டுரை ஆக்கத்திலும் மனோகரன் ராஜினி 4ம் பிரிவு சிறுகதை ஆக்கத்திலும் வெற்றி பெற்று மாகாண மட்ட போட்டியில் பக்கேற்றி இருந்தனர். அந்த வகையில் 4ம் பிரிவு சிறுகதை ஆக்கத்தில் கலந்து கொண்ட மனோகரன் ராஜினி கிழக்கு மாகாண மட்டத்தில் முதலிடத்தை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு தனது பாடசாலைக்கும் போரதீவு கோட்டத்திற்கும் பட்டிருப்பு கல்வி வலயத்திற்கும் மட்டு மாவட்டத்திற்கும் பெருமை ஈட்டியுள்ளார். இவ் மாணவியை வித்தியாலயத்தின் அதிபர் க.இராஜகுமார்,ஆசிரியை சோ.திருக்கேஸ்வரன் ஆகியோரால் நெறிப்படுத்தப்பட்டவர் என்பது குறிப்பிடதக்கது.

Read More

வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலய திருச்சுருப பவனி

மட்/வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலயத்தில் வணக்கமாதத்தின் இறுதி நாளாகிய நேற்று (31)மாலை திருப்பலியை தொடர்ந்து ஆலயத்தை அண்டிய வீதிகள் ஊடாக அன்னையின் திருச்சுருப பவனி இடம்பெற்றது.இவ் நிகழ்வில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ பக்தர்கள் கலந்து கொண்டனர்.                

Read More

கல்முனை ஆதார வைத்திய சாலையில் இலவச விசேட வைத்திய முகாம் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. நேற்றைய தினம் வைத்திய குழுவுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

கல்முனை ஆதார வைத்திய சாலையில் இந்திய  வைத்திய நிபுணர்களினால் இலவச விசேட வைத்திய முகாம் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. நேற்றைய தினம் (29) வைத்திய குழுவுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. காது, மூக்கு, தொண்டை, இந்திய வைத்திய நிபுணர்களால் கடந்த நான்கு நாட்களாக இவ் விசேட இலவச வைத்திய முகாம் நடைபெற்றது இச் சேவையானது Rotary கழகத்தினால் வருடாந்தம் நடாத்ததப்பட்டு வந்த போதிலும் இவ்வருடம் தலைவர் M.சிதம்பரநாதன் முன்னைநாள் தலைவர் S. சதீஸ்குமார் இணைப்பாளர் V.கிருஸ்ணமூர்த்தி, S .உருத்திரன் ஆகியோரின் முயற்சியினால் கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் இரா.முரளீஸ்வரன் அவர்களின் வழிநடத்தலின் கீழ் நன்கு திட்டமிடப்பட்டு நடைபெற்றுள்ளது. இதற்கான அனுமதி சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள போதிலும்,  அறுவைச்சிகிச்சைக்காக கல்முனை ஆதாரவைத்தியசாலை சுகாதார அமைச்சினால் சிபார்சு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்க விடயம். வைத்தியநிபுணர் குழு பின்வருமாறு  …

Read More

கல்வி பொதுதராதர சாதாரண தரப்பரீட்சைக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் கால எல்லை நீடிப்பு

தற்பொழுது பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த நிலையை கவனத்தில் கொண்டு 2017 கல்வி பொதுதராதர சாதாரண தரப்பரீட்சைக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த கால எல்லையை நீடிக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பரீட்சைகள் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த பரீட்சைக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் பணி இம் மாதம் 31ம் திகதியுடன் முடிவடைய இருந்தது. இதனை ஜூன் மாதம் 15ம் திகதி வரையில் நீடிப்பதற்காக கல்வி அமைச்சர் பரீட்சைகள் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இயற்கை அனர்த்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு சகலவிதமான பரீட்சை சான்றிதழ்களையும் இலவசமாக மீள வழங்குவதற்கு கல்வி அமைச்சர் பரீட்சைகள் திணைக்களத்திற்கு ஆலோசனை கூறியுள்ளார்.

Read More