முன் அறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்கப்படும்!

நாட்டின் பல பகுதிகளில் முன் அறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.   நாட்டில் தற்போது நிலவும் அதிகளவான வெப்பம் காரணமாக, மக்களின் மின்சார பாவனை அதிகரித்துள்ளது. அதேவேளை நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு இயந்திரம் செயலிழந்துள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அத்துர வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார்.   நாட்டிலுள்ள நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் 10 வருடங்களின் பின்னர் 31 வீதம் வரை குறைவடைந்துள்ளது. இதன் காரணமாக மின்சார உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொது மக்களிடம், மின்சார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Read More

உதயம் விளையாட்டு கழகத்தின் ஏவிளம்பி வருடத்திற்கான விளையாட்டு விழா

(எஸ்.ஸிந்தூ) களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவு உதயம் விளையாட்டு கழகத்தின் விளையாட்டு விழா நேற்று காலை 15 கீழ மேல் மரதன் ஒட்ட நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்டது பிற்பகல் உதயம் விளையாட்டு கழகத்தின் பொது விளையாட்டு மைதானத்தில் கலாசார நிகழ்வுகள் கழகத்தின் தலைவர் இ.புவநேந்திரகுமார் தலைமையில் ஆரம்பமாகி இடம் பெற்றது.   அந்த வகையில் இவ் விளையாட்டு விழாவிற்கு பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன் மற்றும் ஞா.ஸ்ரீநேசன் ஆகியோரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான. கோ.கருணாகரம்,இரா.துரைரெட்ணம் க.கிருஸ்ணப்பிள்ளை மற்றும் மா.நடராஜா ஆகியோரும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர். இ.சாணக்கியம் அவர்களும் கலந்து கொண்டனர்.   இவ் விளையாட்டு விழாவின் போது முட்டி உடைத்தல் கயிறு இழுத்தில் சறுக்கு மரம் ஏறுதல் தலையணை சமர் போன்ற பல தரப்பட்ட போட்டிகளும் பாடசாலை மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்றமாணவர்களும்…

Read More

பாண்டிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் அரசடி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்!

பாண்டிருப்பு பிரதான வீதியில் குளக்கரை ஓரம் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாளிக்கும் ஸ்ரீ சித்தி விநாயகர் அரசடி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா விஞ்ஞாபனமும், மணவாளக் கோல கும்பாபிஷேக தின நவோத்தர சகஸ்ர சங்காபிஷேகமும் நாளை திங்கட்கிழமை (01 – 05- 2017) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. தொடர்ந்து பத்து தினங்கள் நடைபெறும் உற்சவத்தில் 01 ஆம் திகதி ஸ்ரீ வட பத்திர காளியம்பாள் ஆலயத்திலிருந்து கொடிச்சீலை கொண்டுவரப்பட்டு காலை 11.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறும். 05 ஆம் திகதி சங்காபிஷேகம் , 08 ஆம் திகதி பி.ப 4மணிக்கு வடபத்திர காளியம்பாள் ஆலயத்தில் வேட்டைத்திருவிழா, 09 ஆம் திகதி முத்துச்சப்புர ஊர்வலம்,10 ஆம்; திகதி தீர்த்தோற்சவம் ஆகியன இடம்பெறவுள்ளன. உற்சவகாலங்களில் தினமும் 5.30 மணிக்கும் விசேட பூஜைகள் ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.  

Read More

தேற்றாத்தீவு புனித யூதாததேயு ஆலயத்தின் இறுதி நாள் திருவிழா

(எஸ்.ஸிந்தூ) தேற்றாத்தீவு புனித யூதாததேயு ஆலயத்தின் இறுதி நாள் திருவிழாவானது நேற்று(30.04.2017) ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.இதன் போது  திருப்பலியினைதேவாலயத்தின் அருட்தந்தை நிர்மல் சூசைராஜ் அவர்களும் ஏனைய அருட்தந்ததைகளும் நிகழ்த்தினர்   அவர்கள் நிகழ்த்தி வைத்தார்.இவ் திருவிழா திருப்பலியில் கலந்து கொள்ள இலங்கையின் பல பாகங்களிலும் இருந்தும் பலர் கலந்து கொண்டனர் n       

Read More