முதலையிடம் அகப்பட்டு இளைஞர் பலி

மட்டக்களப்பு, முறுத்தானைப் பிரதேசத்திலுள்ள  ஆற்றில் நீராடிய  இளையதம்பி தங்கராஜா (வயது 20) என்ற இளைஞர் முதலையிடம் அகப்பட்டு, மரணமடைந்துள்ளார்.   நண்பர்களுடன் நேற்று மாலை முறுத்தனை ஆற்றில் நீராடிய வேளையில் இவரை முதலை பிடித்துள்ளது.       இதனையடுத்து நண்பர்களும் உறவினர்களும்   அவரைக் காப்பாற்றுவதற்கு முயற்சித்தபோதும் அது பலனளிக்கவில்லை.   இந்நிலையில், அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Read More

கல்முனை வலயத்தின் இவ்வாண்டிற்கான தமிழ்த் தினப்போட்டிகள்

    கல்முனை வலயத்தின் இவ்வாண்டிற்கான தமிழ்மொழித்தினப் போட்டிகள் நேற்று(09) கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசியபாடசாலையின் சிசிலியா மேரி அரங்கில் கல்முனை வலயத்தின் பிரதிக்கல்வி பணிப்பாளர் பீ.எம்.வதுர்தீன் தலைமையில் நடைபெற்றது. கல்முனை வலயத்தில் உள்ள 40 பாடசாலைகள் கலந்து கொள்ளும் தமிழ் மொழி தினப்போட்டிகள் கல்முனை வலயத்தின் தமிழ் பிரிவிற்கு பொறுப்பான உதவிக்கல்வி பணிப்பாளர் கே.வரதராஜனின் நெறிப்படுத்தலில் கீழ் அனைத்து நிகழ்வுகளும் நடைபெற்றது. நாற்பது பாடசாலைகள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் தனி நிகழ்வுகள் 22 உம், குழு நிகழ்வுகள் 10 உம் நேற்று(09) நடைபெற்றதோடு ஏற்கனவே 14 நிகழ்வுகள் நடைபெற்று முடிந்துள்ளன. மேலும் வலயமட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கான மாவட்ட மட்டப்போட்டிகள் சம்மாந்துறை அல்.மர்ஜீம் மகளீர் கல்லூரியில் எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது. குறிப்பாக இம்முறை புதிதாக பொத்துவில் உப…

Read More

கல்முனையில் வெசாக் தின நிகழ்வுகள்!

  நேற்று வெசாக் தினத்தை முன்னிட்டு கல்முனை சுபத்திராம விகாரையில் சங்கைக்குரிய ரன்முத்துகல சங்கரத்தின தேரர் தலைமையில் மதவழிபாடுகளும் வெசாக் தின நிகழ்வுகளும் நடைபெற்றன.   இதில் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டு பூசை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.   கல்முனை இராணுவ முகாமின் ஏற்பாட்டில் தேனீர் உபசாராமும் நிகழ்வு ஒழுங்கும் நடைபெற்றது.   அத்துடன் வெசாக் அலாங்காரா தோரணங்களை காண்பதற்காக பிரதேச மக்கள் வந்துசெல்கின்றனர். மத வழிபாடுகள் தமிழிலும் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.  

Read More

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஓர் அறிவித்தல்!

  கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை தற்போது வழங்கப்படுவதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.   இது வரையில் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் தமது விண்ணப்பங்களை கூடிய விரைவில் அனுப்பி வைக்குமாறு அதிபர்கள் கேட்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.   இதேவேளை, குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.   இந்த திகதிக்கு பின்னர் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.   புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கு அமைய எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More