கல்லடியில் விபத்து: ஐவர் படுகாயம்

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய விபத்துச் சம்பவத்தில் ஐவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   இச்சம்பவம் நேற்றிரவு (திங்கட்கிழமை) 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து காத்தான்குடி நோக்கிவந்த இலங்கை போக்குவரத்துச்சபை டிப்போவுக்குச் சொந்தமான பேரூந்து கல்லடி பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது, வேகக்கட்டுப்பாட்டினை இழந்த முச்சக்கரவண்டி பேரூந்தின் பின்னால் மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.   மேற்படி விபத்தில் முச்சக்கரவண்டி முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன், குறித்த பேருந்தும் சிறிய சேதங்களுக்குள்ளானது. சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Read More