கல்வி பொதுதராதர சாதாரண தரப்பரீட்சைக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் கால எல்லை நீடிப்பு

தற்பொழுது பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த நிலையை கவனத்தில் கொண்டு 2017 கல்வி பொதுதராதர சாதாரண தரப்பரீட்சைக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த கால எல்லையை நீடிக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பரீட்சைகள் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த பரீட்சைக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் பணி இம் மாதம் 31ம் திகதியுடன் முடிவடைய இருந்தது. இதனை ஜூன் மாதம் 15ம் திகதி வரையில் நீடிப்பதற்காக கல்வி அமைச்சர் பரீட்சைகள் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இயற்கை அனர்த்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு சகலவிதமான பரீட்சை சான்றிதழ்களையும் இலவசமாக மீள வழங்குவதற்கு கல்வி அமைச்சர் பரீட்சைகள் திணைக்களத்திற்கு ஆலோசனை கூறியுள்ளார்.

Read More

இலங்கையில் சூறாவளி அபாயம் ; வானிலை அவதான நிலையம்

வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கத்தினால் இலங்கையில் சூறாவளி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் ஆர்.ஜயசேகர தெரிவித்துள்ளார். வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் வடக்கு திசை நோக்கி நகர்ந்தால் மணிக்கு 80கி.மீ. வேகத்தில் காற்று வீசி சூறாவளியை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளதாக அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்படி தகவல் பணிப்பாளரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியிலுள்ள தாழமுக்கம் வலுவடைந்து சூறாவளியாக மாறி வடக்கு திசையை நோக்கி நகர்ந்து வங்காள தேசம் வரை பயணிக்கும் என்று வானிலை அவதான நிலைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.   அதன் காரணமாக இலங்கையில் சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், தென் மாகாணம் போன்ற பகுதிகளில் காற்றின் வேகம் மிகவும் அதிகரித்துக்…

Read More

களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் ஒரு கடை உட்பட ஆலயத்தின் உண்டியலும் உடைக்கப்பட்டு கொள்ளை

களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் ஒரு கடை உட்பட ஆலயத்தின் உண்டியலும் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். களுவாஞ்சிகுடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள சில்லறைக் கடை ஒன்றும் அக் கடைக்கு அண்மையில் அமைந்துள்ள விஷ்ணு ஆலயத்தின் உண்டியலுமே உடைத்து கொள்ளையிடப்பட்டதாக தெரியவருகின்றது. சனிக்கிழமை இரவு இடம்பெற்ற இக் கொள்ளை சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. கொள்ளை இடம்பெறும் தினத்தன்று அருகில்  அமைந்துள்ள  எனது வீட்டில் நித்திரை செய்தேன். அதிகாலை கடை திறப்பதற்காக வந்தவேளை எனது கடை உடைக்கப்பட்டுள்ளதை பார்த்தேன் உடன் பொலிசாருக்கு அறிவித்தேன். எனது கடையில் இருபதாயிரம் ரூபாய் பெறுமதிக்கு மேலான  கையடக்க தொலைபேசி அட்டைகளும்,  சில்லறை பணமும் இதன் போது கொள்ளையிடப்பட்டுள்ளதுடன் சில பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன் போத கடை உரிமையாளர் தெரிவித்தார். மற்றும் ஆலயத்தின் பொருட்களை பாதுகாக்கும்  அறை உடைக்கப்பட்டுள்ளதாகவும் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதாகவும்…

Read More