அம்பாறை – தம்புள்ளை, பேருந்தில் உறங்கிய நிலையில் திடீரென கீழே இறங்கிய இளைஞர் !

வேகமாக பயணித்த பேருந்தில் இருந்து உறங்கிய நிலையில் கீழே இறங்கிய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த இளைஞர் லக்கல வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார். பேருந்தில் அமர்ந்து பயணித்து கொண்டிருந்த இளைஞர் கனவு கண்டவாறு நடந்து சென்று திடீரென பேருந்தில் இருந்து கீழே விழுந்துள்ளார் என வைத்தியசாலைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அம்பாறையில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த பேருந்தில் இந்த இளைஞர் பயணித்துள்ளார் எனவும் மேலதிக தகவல் பெற்று கொள்ள முடியாத நிலைமையில் அவர் உள்ளார் எனவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். உடம்பில் ஏற்பட்டுள்ள கடுமையான காயங்கள் காரணமாக நினைவற்ற நிலையில் இந்த இளைஞர் உள்ளார் எனவும், அவர் கிட்டத்தட்ட 33 வயதுடையவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது. திடீரென ஏற்பட்ட இந்த விபத்தினால் குறித்த இளைஞர்…

Read More

(எச்சரிக்கை) ! ! அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் பிளாஸ்டிக் முட்டைகள் !

அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் கோழிமுட்டைகள் விற்பனையில் முறைகேடுகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பிளாஸ்டிக் முட்டைகள், காலாவதியான முட்டைகள் என்பவற்றை விற்பனை செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதிலிருந்து பாதுகாப்பாகவும், விழிப்பாகவும் இருக்குமாறு தென்கிழக்கு சுகாதாரப் பேரவை துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அம்பாறை மாவட்டப் பிரதேசங்களில் தற்போது போலி முட்டைகள், அதாவது பிளாஸ்டிக் முட்டைகள் மற்றும் காலாவதியான முட்டைகளும் தாராளமாக கிடைக்கின்றன, என்றும், முட்டைகளை வாங்கும் போது அவதானமாக இருக்குமாறும் அந்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Read More