காரைதீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற புகைத்தல் எதிர்ப்பு தின கருத்தரங்கு

காரைதீவு பிரதேச செயலாளரின் பணிப்பின் பேரில் காரைதீவு பிரதேச செயலக சமூர்த்தி பிரிவினரால் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு 2017/06/01 ஆம் திகதி இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளரின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி,. சமூர்த்தி முகாமையாளார் மற்றும் சமூர்த்தி பிரிவு உத்தியோகத்தர்கள் சமூதாயம்சார் அபிவிருத்தி உத்தியோகத்தர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.         

Read More

95ஆவது நாளாக தொடரும் போராட்டத்தில் நோன்புடன் இணைந்துள்ள இஸ்லாமிய பட்டதாரிகள்

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 95ஆவது நாளாகவும் நேற்று தொடர்ந்த நிலையில், இதில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய பட்டதாரிகளும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், தென்னிலங்கையில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் துன்ப துயரங்களில் பங்கேற்பதாக கூறியுள்ளதுடன், பிரார்த்தனையிலும் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளனர். தொடர்ந்தும் தெரிவிக்கையில், நாம் எவ்வளவோ கூறியும் கிழக்கு முதலமைச்சர் 1700 பேருக்கு முதற்கட்டமாக தொழில் வழங்கப்போவதாக கூறியுள்ளார். அவர் தொழில் தருவதானால் கிழக்கிலுள்ள வேலையின்றிய பட்டதாரிகள் அனைவருக்கும் தரவேண்டும். இதுவே எமது கோரிக்கையாகும் என அவர்கள் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.       

Read More

திருகோணமலையில் உயிருடன் கரையொதுங்கிய திமிங்கிலங்களால் பரபரப்பு!!

திருகோணமலை மாவட்டம் சம்பூர் கடற்கரையில் 20 வரையான திமிங்கிலங்கள் உயிருடன் கரையொதுங்கியுள்ளன. வங்கக் கடலில் ஏற்பட்ட மோரா சூறாவளி மற்றும் சிறிலங்காவில் கொட்டிய கடும் மழையைத் தொடர்ந்துஇ சம்பூர், பழைய இறங்குதுறைப் பகுதியில் 20இற்கும் அதிகமான திமிங்கலங்கள் நேற்று கரையொதுங்கின. நீந்தமுடியாமல் கரையொதுங்கிய திமிங்கிலங்களை கடற்படையினரும் உள்ளூர் மக்களும் கடலுக்குள் கொண்டுவிடும் முயற்சியில் இறங்கினர். ஆழ்கடலில் காணப்படும் திமிங்கலங்கள் ஆழம் குறைந்த கடற்கரையை நோக்கி வந்தமைக்கான காரணம் தெரியவில்லை.

Read More

கிரான்குளம் ஆனைவாவி கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கும் பொங்கல் விழாவும்

மட்டக்களப்பு-கிரான்குளம் அருள்மிகு ஆனைவாவி கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கும் பொங்கல் விழா உட்சவமானது எதிர்வரும் 06-06-2017 ஆரம்பமாகி 09-06-2017 நிறைவடையும் .

Read More

இன்றைய ராசிபலன் 02.06.2017

மேஷம்:  புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப் பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுக மாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர் கள் மதிப்பார்கள். கனவு நனவாகும் நாள். ரிஷபம்: மனதிற்கு பிடித்த வர்களை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். புது வேலைக் கிடைக்கும். வியா பாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். அலுவலகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். மிதுனம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர் கள் மதிப்பார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். வெற்றி பெறும் நாள். கடகம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம்…

Read More

பல்வேறு நோய்களை குணமாக்கும் மஞ்சள் பால்!

வெறும் பாலைக் குடிக்காதே… அதுல ஒரு துளி மஞ்சள் பொடி கலந்து குடி’ என்பார்கள் நம் வீட்டுப் பாட்டிகள். ஜலதோஷம் பிடித்தால், தொண்டை வறண்டால், வறட்டு இருமல் வந்தால் மட்டுமே நாம் மஞ்சள் தூள் பால் அருந்துவோம். நமது முன்னோர்கள் சொல்லிச் சென்றதை சரியாகப் புரிந்துகொண்டு பின்பற்றாததுதான் இன்றைக்குப் பல நோய்களுக்குக் காரணம். அவற்றில் மஞ்சள் பால் ரகசியமும் ஒன்று. இது ஓர் ஆரோக்கிய அதிசயம். இதைக் குடிப்பதால் கிடைக்கும் மருத்துவப் பலன்கள் ஏராளம். அவை… * மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுநோய் செல்களை தடுக்கும். கீமோதெரப்பியால் உண்டாகும் பக்க விளைவுகளையும் குறைக்கும். * இதில் வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை அதிகம் இருப்பதால்…

Read More