முச்சக்கர வண்டி சாரதிகளே! எதிர்வரும் 13 திகதி முதல்???

முச்சக்கர வண்டிக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு போக்குவரத்து தொடர்டபான தேசிய சபையின் பயிற்சி அத்தாட்சி பத்திரத்தை பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 13 அம் திகதியிலிருந்து இது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து தொடர்பான தேசிய சபையின் செயலாளர் டொக்டர் சிசர கோத்தாகொட தெரிவித்தார். ஆகவே சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு முன்னர் இந்த பயிற்சி அத்தாட்சி பத்திரம் பெற்றுக்கொள்வது அவசியமாக்கப்பட்டுள்ளது. சாரதி அனுமதி பத்திரத்திற்கு விண்ணப்பித்த பின்னர் போக்குவரத்து தொடர்பான தேசிய சபையினால் மேற்கொள்ப்படும் பயிற்சி நடவடிக்கைகளில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. வாரத்திற்கு 200 இற்கும் மேற்பட்டவர்கள் சாரதி அனுமதிப் பத்திரத்திற்காக விண்ணப்பிக்கின்ற போதிலும் அவர்களில் முச்சக்கர வண்டிக்காக விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் கட்டாயமாக இந்த பயிற்சி நடவடிக்கையில் கலந்துகொள்ள வேண்டும் என போக்குவரத்து தொடர்பான தேசிய சபையின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

100ஆவது நாளாகவும் தொடரும் அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டமானது காரைதீவு விபுலானந்தா சதுக்கமருகே இன்று 100ஆவது நாளாகவும் தொடர்கிறது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள் கருத்து தெரிவிக்கையில், கிழக்கு மாகாண முதலமைச்சர் 1700 பேருக்கு ஆசிரியர் தொழில் கொடுக்க நேர்முகப்பரீட்சை நடத்தி வருகிறார். அதனை நாம் முற்றாக எதிர்கின்றோம். இன்னுமின்னும் 2012 இலும் அதனையடுத்து வரும் பட்டதாரிகளும் குறிப்பாக கலை வர்த்தக நுண்கலைப் பட்டதாரிகள் மிகவும் பாதிக்கப்படவுள்ளனர். கிழக்கு மாகாண ஆளுநரும் இந்த விடயத்தில் பாராமுகமாக இருப்பது எமக்கு வேதனையளிக்கின்றது. நாடாளுமன்ற குழுத்தலைவராக இருந்து இங்கு வந்த மாரசிங்க எம்.பி எமக்களித்த 2 மாதகால வாக்குறுதி காற்றில் பறந்துவிட்டது. நாம் யாரை நம்புவது? எத்தனை நூறு நாட்கள் சென்றாலும் நாம் எமது இறுதி இலக்கை அடையும் வரை பின்வாங்கப் போவதில்லை என தெரிவித்தனர்.  

Read More

மண்டூர் பாலமுனை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் உலக சுற்றாடல் தின நிகழ்வு

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நிகழ்வாக பட்டிருப்புக் கல்விவலயத்திற்குட்பட்ட மண்டூர் பாலமுனை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் அதிபர் எஸ். கணேஸ்வரன் தலைமையில் 5 ஆம் திகதி திங்கட்கிழமை உலக சுற்றாடல் தின நிகழ்வு இடம்பெற்றது. இவ்வருட உலக சுற்றாடல் தினத்தின் தொனிப்பொருளான இயற்கையோடு இணைந்த மக்கள் எனும் தொனிப்பொருளுக்கமைவாக சிறந்த ஒரு சுற்றாடலை கட்டியெழுப்பும் நோக்கில் இப்பாடசாலையின் சுற்றாடல் முன்னோடிப் படையணி மாணவர்களால் ஒரு தொகை பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்கள் சேகரிக்கப்படன அத்தோடு மரக்கன்றுகளும் பாடசாலை வளாகத்தில் நடப்பட்டன. இந் நிகழ்வில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் உதவிப்பணிப்பாளர் எஸ்.உதயராஜன், பிரதேச சுற்றாடல் உத்தியோத்தர்களான கே.லோகராசா, ம.சதீஸ்குமார் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்              

Read More

காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் ஊர்சுற்று காவியம் பாடுதல்

காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவத்தில் இன்று செவ்வாய்கிழமை சடங்கு பூஜையும் ஊர்சுற்று காவியம் பாடல் நிகழ்வும் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது. இதன் போதான படங்கள்..                           

Read More

வதந்திகளில் உண்மை இல்லை ! பிளாஸ்ரிக் அரிசி மற்றும் முட்டை தொடர்பில் விளக்கம்

இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்ரிக் அரிசி மற்றும் முட்டை சந்தையில் இருப்பதாக பரப்பப்படும் வதந்திகளில் உண்மை இல்லை என்று சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இணையத் தளத்தில் வெளிவரும் செய்திகள் பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நாம் கேட்ட போது இந்த பிரிவின் சிரேஷ்டஅதிகாரி ஒருவர் இது குறித்து தெரிவிக்கையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசி, துறைமுகப் பிரிவில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது என்று தெரிவித்தார். உணவுக்கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் நான்கு பேர் இறக்குமதி செய்யப்படும் உணவு வகைகளை பரிசோதனை செய்கின்றனர். துறைமுகத்தில் உள்ள விவசாயத் திணைக்களத்தின் அதிகாரிகள் மூலம் அவை பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இதற்கமைவாக நுகர்வோருக்கு பொருத்தமற்ற எந்த உணவுப் பொருட்களும் நாட்டிற்குள் வருவதற்கு இடமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.   கால்நடை வளத் திணைக்களத்தினால் வழங்கப்படும் சான்றிதழ்களுக்கு அமையவே…

Read More

இன்று கல்முனையில் ஆத்மாஞ்சலிப்பிரார்த்தனை! கல்விமான் அருட்சகோ.மத்தியுவின் முதலாவது சிரார்த்ததினம்!

காரைதீவு சகா கல்முனையைச்சேர்ந்த நாடறிந்த கல்விமான் முன்னாள் கல்முனை பற்றிமாக்கல்லூரியின் அதிபர் அருட்சகோ. எஸ்.ஏ.ஜ.மத்தியு அடிகளாரின் முதலாவது சிரார்த்ததினம் இன்றாகும்.இன்று(06.07.2017)செவ்வாய்க்கிழமையாகும் அன்னாரது 1வது சிரார்த்ததினத்தையொட்டி கல்முனை பற்றிமாகல்லூரியின் பழைய மாணவர்சங்கத்தினர் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடுசெய்துள்ளனர். இன்று மாலை பாண்டிருப்பு புனித அந்தோனியார் தேவாலயத்தில் விசேட ஆத்மாஞ்சலி பூஜையும் பிரார்த்தனையும் இடம்பெறவுள்ளது. கல்முனைப்பிராந்திய குருமுதல்வர் பங்குத்தந்தை வண.பிதா. லியோ அடிகளார் அவ்விசேட பூஜையை நடாத்திவைப்பார் என்று பழையமாணவர்சங்கச் செயலாளர் பொறியியலாளர் ஹென்றிஅமல்ராஜ் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்: அருட்சகோ.மத்தியூ10 அடிகளாரின் உன்னத குணத்திற்காக பாண்டிருப்பு சகோதரர் இல்லத்தில் தங்கியிருக்கும் விசேடதேவையுள்ள மாணவர்களுக்கு இன்று மதியபோசனத்தை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.  

Read More