சம்மாந்துறை ஸ்ரீ அகோர மாரியம்மன் ஆலயம் தோன்றிய வரலாறு

கிழக்கிலங்கையின் சம்மாந்துறையில் மிகவும் பழமை வாய்ந்த மட்டக்களப்பு தரவை – 2 ல் அமையப்பெற்ற கோரக்கர் பிள்ளையார் ஆலய எல்லைக்குள் தானாகத்  தோன்றி அகோரமாரியம்மன் மக்களுக்கு அருள் புரிகின்றார். சொறிக்கல்முனையில் வசித்துவரும் கிறிஸ்தவராகிய பூராசி என்பவரின் கனவில்  தோன்றிய அம்பாள் தான் சம்மாந்துறையில் கோரக்கர் கோயில் எலலைக்குள் நிலத்தின் கீழ்  குடிகொண்டிருப்பதாகவும் , தன்னை வெளியில் எடுத்து கொடுக்கும் படியும்  கூறித்தான் குடிகொண்டிருந்த எல்லையை மிகவும் தெளிவாகவும் காட்டியுள்ளார். சொறிக்கல்முனையை சேர்ந்த அந்த நபர் கோரக்கர் ஆலயபரிபால​ன சபையினரிடம் விபரத்தினை தெளிவாக கூறினார் சிலர் வியப்படைந்தனர் இன்னும் சிலர் ஏழனம் செய்து சிரித்தனர் இதைக்கண்ட  கிறிஸ்தவ ந​ப​ர் நான்சொல்லுவது உண்மை என்றும் இது தெய்வத்தின் கட்டளை என்றும் சத்தியம் செய்தார். இவ் விடையத்தை நோக்கிய பரிபாலன சபையினர் அவர் சொல்வதை செய்துதான் பார்போம் என்று கூறினர். இதற்கு யாவரும் ஒத்துழைப்பு…

Read More

இன்றைய ராசிபலன் (03.07.2017)

மேஷம் மேஷம்: உங்கள் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக் கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். விலை உயர்ந்தப் பொருட் கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோ கத்தில் மதிப்புக் கூடும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். ரிஷபம் ரிஷபம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள். மிதுனம் மிதுனம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர் களிடம் சொல்லி மகிழ்வீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு…

Read More

அம்பாறை மாநகர் ஶ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலய வருடாந்த பிரமோற்சவ பெருவிழா

அம்பாறை மாநகர் அருள்மிகு ஶ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவ பெருவிழாவானது 14-07-2017 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 23-07-2017 அன்று தீர்த்த உற்சவத்துடன் நிறைவடையவுள்ளது  

Read More

கதிர்காம பாதயாத்திரை வேல் சாமி குழுவினர் தேற்றாத்தீவை வந்தடைந்தனர்

(எஸ்.ஸிந்தூ) இலங்கையில் முக்கிய முருகன் ஆலயங்களில் ஒன்றான கதிர்காம முருகனின் ஆடிவேல் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் செல்வச்சந்நிதியில் இருந்து மட்டக்களப்பு காரைதீவை சேர்ந்த வேல் சாமி குழுவினர் முருனினால் ஆருளப்பட்ட வெள்ளி வேலுடன் தேற்றாத்தீவு கொம்பு சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (02.07.2017) காலை 10.00 மணியளவில் வருகை தந்தனர். இவ் பாதயாத்திரை குழுவினருக்கு தேற்றாத்தீவு பொது மக்கள் மற்றும் ஆலயங்களின் பரிபால சபையின மிகுந்த வரவேற்பளித்துடன் இவர்களுக்கான உணவு ஆகாரங்களையும் வளங்கி வைத்தனர் இக் குழுவிருக்கு மட்டக்களப்பு மலேரியா தடுப்பு இயக்கத்தின் வைத்தியர் மேகலா ரவிச்ந்திரனின் பணிப்புரையில் செட்டிபாளையம் சுகாதர பரீசோதகரின் வளிநாடத்தலில் மலேரியா தடுப்பு பரிசோதனையும் இடம் பெற்றமையும் குறிப்பிடதக்கவிடயம்

Read More

வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய தீர்தோற்சவம்

வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 10ஆம் நாளாகிய வெள்ளிக்கிழமை (30/06/2017) தீர்தோற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. விசேட கொடித்தம்ப பூசை, வசந்தமண்டப பூசையினைத் தொடர்ந்து மஞ்சள் இடிக்கும் நிகழ்வு இடம்பெற்று யானையிலே அங்குசம் எடுத்துச்செல்லப்பட்டு தீர்தோற்சவம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமி உள்வீதியுலா மற்றும் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது.                     

Read More