கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு காரைதீவில் மருத்துவமுகாம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றான கதிர்காம முருகனின் ஆடிவேல் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் செல்வச்சந்நிதியில் இருந்து கதிர்காமம் நேக்கிய​ பாதயத்திரையாக​ வருகைதந்த வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரீகர்கள் இன்று (06.07.2017) காரைதீவூ ஸ்ரீ முருகனாலயத்தை அடைந்ததும் அங்கு   இந்து சமய விருத்திச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் காரைதீவூ ஆதார வைத்தியசாலையினர் நடமாடும் மருத்துவ முகாமொன்றை நடாத்தி பாதயாத்திரீகர்களுக்கு சிகிச்சையளிப்பதனைப் படங்களில் காணலாம்

Read More

திருமண நாள் வாழ்த்து சிவனாதன்-சிறிக்காந்தினி

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் காரைதீவை சேர்ந்த திரு திருமதி சிவனாதன்-சிறிக்காந்தினி தம்பதிகள் தங்களது 14வது வருட இல்லற வாழ்க்கையின் 14வது வருட நிறைவு நாளை தங்களது மழலை செல்வங்களுடன் இன்று (06.07.2017) தங்கலது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர் இவர்களை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து karaitivu.lk சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.

Read More

இன்றைய ராசிபலன் 06/07/2017

மேஷம் சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனஉளைச்சல் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துபோவது நல்லது. வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும்.உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள். ரிஷபம் பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் அனுகூலமும் உண்டு. ஆடை, ஆபரணம் சேரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தில் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். மிதுனம் கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தொட்டது துலங்கும் நாள். கடகம் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.…

Read More