காரைதீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுவர் கழக சம்மேளனக் கூட்டம்…

கடந்த 2017/06/30 ம் திகதி அன்று சிறுவர் கழக சம்மேளனக் கூட்டமானது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிறுவர் கழக கடந்த கால செயற்பாடுகள் தொடர்பாகவும்,மற்றும் இந்நிகழ்வில் SWOAD நிறுவனத்தின் அனுசரணையுடன் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் மற்றும் சிறுவர் கழக உறுப்பினர்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நிர்வாக உத்தியோகத்தர், திவிநெகும தலைமை பீட முகாமையாளர் , சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.                

Read More

காரைதீவு சிவ முத்து மாரி அம்மனை தரிசித்த வெள்ளையர்கள்

மேன்மை கொண்ட சைவ சமயம் இவ் உலகெங்கும் வியாபித்துள்ளமையின் பால் ஈர்க்கப்பட்ட வெள்ளையர்கள் நேற்று 9.7.2017 காரைதீவு கடற்கரை வீதியில் அமைந்துள்ள சிவ முத்து மாரி அம்மனை தரிசித்து ,அறுசுவை உணவை பரிமாறி சென்றுள்ளனர். வருடா வருடம் கதிர்காம பாத யாத்திரை காலத்தில் எம் மக்களுடன் வெள்ளையர்களும் இணைந்து யாத்திரை செய்வது வழமையான தொன்றாகியதன் பிரகாரம் ,காரைதீவிலுள்ள சிவமுத்து மாரி அம்மனை தரிசித்த வெள்ளையர்களை, இன்முகத்துடன் வரவேற்கப்பட்டு, எம்மக்களுடன் ஒன்றாக உணவை பறிமாறி கொண்டதன் பிற்பாடு கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது.  

Read More

இன்றைய ராசிபலன் 10.07.2017

மேஷம்: மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோம்பல் நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். புத்துணர்ச்சி பெருகும் நாள். மிதுனம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். கடகம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்லவாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்.…

Read More