அக்கரைப்பற்றில் யானை தாக்கி 63 வயதான நபர் உயிரிழப்பு

அக்கரைப்பற்று – அலிக்கம்பை வயல் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யானை தாக்குதலுக்கு இலக்காகி, பலத்த காயங்களுக்குள்ளான 63 வயதான நபர், அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Read More

இன்றைய ராசிபலன் (03.08.2017)

மேஷம்: இன்றும் இரவு 8.27 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனஉளைச்சல் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள்.பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.   ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் அனுகூலமும் வியாபாரத்தில் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். இரவு 8.27 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.   மிதுனம்: கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தொட்டது துலங்கும் நாள்.   கடகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளை கள் கேட்டதை…

Read More