வெகு சிறப்பாக நடைபெற்ற VSC யின் கல்விச்சாதனையாளர்கள் பாராட்டுவிழா…

காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகத்தினால் காரைதீவு பிரதேசத்திற்கு புகழைப்பெற்றுத்தந்த கல்விச்சாதனையாளர்களைப் பாராட்டும் விழா இன்று(13) ஞாயிற்றுக்கிழமை காரைதீவு விபுலானந்தா ஞாபகார்த்த மணி மண்டபத்தில் கழக தலைவர் திரு.S.நேசராஜா தலமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இன் நிகழ்விற்கு பிரதம அதிதியாகளாக அம்பாறை மாவட்ட பா.உ கெளரவ.க.கோடீஸ்வரன் மற்றும் மட்டு மாவட்ட பா.உ கெளரவ ஞா.சிறிநேசன் அவர்களும் கலந்து சிறப்பித்தார். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்கள் க.பொ.த.சா.த பரீட்சையில் 9ஏ பெற்ற மாணவர்கள் ,க.பொ.த. உ.த. சாதனையாளர்கள் உள்ளிட்டோர் கௌரவிக்கப்பட்டனர். இவ்விழாவிற்கு விசேடமாக சாதனைபடைத்த மாணவர்களின் பெற்றோர்களும் அழைக்கப்பட்டிருந்தமை ஏற்பாட்டுக் குழுவைப் பாராட்ட வைத்தது. படங்கள்-டினஸ்ரன் மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்

Read More

இன்றைய ராசிபலன் 13.08.2017

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து போகும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வெளி உணவை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். ரிஷபம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து போங்கள். நண்பர் ஒருவர் உங்களை உதாசீனப்படுத்தும் வகையில் நடந்துக் கொள்வார். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். போராடி வெல்லும் நாள். மிதுனம்: தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங் கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். பெருந் தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள். கடகம்: பிரச்னைகளை சமாளிக்கும் மனோ பலம் அதிகரிக்கும்.…

Read More