உலகளவில் பேஸ்புக் மெசெஞ்சர் தாங்க டாப்

#Facebook #Apps வாட்ஸ் அப்பை விட பேஸ்புக் மெசெஞ்சர் ஆப்பை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகம் என பேஸ்புக் அறிவித்துள்ளது.இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாத நபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவுக்கு பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர் என மக்கள் மூழ்கிகிடக்கின்றனர். இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், பேஸ்புக் ஆப்பை மாதத்துக்கு 1.3 பில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர்.எனவே புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளோம், வாட்ஸ் அப் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள போதிலும் பேஸ்புக் மெசெஞ்சர் பயன்படுத்துபவர்களே அதிகம் என தெரிவித்துள்ளது.

Read More

பேஸ்புக் புதிதாக அறிமுகம் செய்த Snooze Button பற்றி தெரியுமா?

உலகெங்கும் உள்ள முன்பின் அறியாதவர்களையும் இணைக்கும் வசதியினை பேஸ்புக் தருகின்றது.எனினும் இவ்வாறு அறிமுகமில்லாதவர்களை இணைத்துக்கொள்ளும்போது சில சமயங்களில் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும்.இப் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு புதிய வசதி ஒன்றினை பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. அதாவது Snooze எனும் புதிய பொத்தானை அறிமுகப்படுத்தியுள்ளது.இதனைப் பயன்படுத்தி எமது செய்தி பின்னூட்டல்கள், புகைப்படங்கள் உட்பட ஏனைய போஸ்ட்களை குறித்த நபர்களின் பார்வையில் படாதவாறு செய்ய முடியும். அதாவது அவர்களை நிரந்தரமாக ப்ளாக் (Block) செய்யாமல் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் ஒதுக்கி வைத்திருக்க முடியும். இதன்படி 24 மணிநேரம், ஒரு வாரம் மற்றும் ஒரு மாதம் எனும அடிப்படையில் கால அளவினை தேர்வு செய்துகொள்ள முடியும்.

Read More