உங்கள் ஐபோனில் ஐஓஎஸ் 11-ஐ பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்வது எப்படி.?

ஆப்பிள் நிறுவனம் தற்சமயம் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன, அதன்படி இப்போது ஆப்பிள் சாதனங்களுக்கு  ஐஒஎஸ் 11 அப்டேட் வழங்குகிறது, இந்த ஐஒஎஸ் அப்டேட் பொறுத்தவரை பல மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் போன் பொதுவாக இந்தியாவை விட மற்ற நாடுகளில் தான் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது,  மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஐஒஎஸ் அப்டேட். செப்டம்பர்-19: 2017 செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் இந்த புதிய ஐஒஎஸ் 11 அப்டேட் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை மக்களிடையே பலஎதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஆப்பிள்: ஆப்பிள் ஐபோன் 7,ஐபோன் 7 பிளஸ், ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் பிளஸ், ஐபோன் 6 பிளஸ், ஐபோன் 6, ஐபோன் எஸ்இ, ஐபோன் 5எஸ்,12.9-இன்ச் ஐபேட் ப்ரோ(2017), 12.9-இன்ச் ஐபேட் ப்ரோ(2016), 10.5-இன்ச் ஐபேட்…

Read More

DNA ஐ பயன்படுத்தி ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்!

#Robot கடந்த 1966 ஆம் ஆண்டு அமெரிக்காவின் விஞ்ஞான கட்டுக்கதையாக உருவாகிய திரைப்படம்தான் Fantastic Voyage.இத் திரைப்படத்தில் மிகவும் நுண்ணிய நீர்மூழ்கிக்கப்பல்கள் மனிதனின் உடலில் செலுத்தப்படுவது போன்று காண்பிக்கப்படும். மேலும் இவை மூளையில் ஏற்படும் இரத்த உறைவினை சரிசெய்வது போன்றும் காட்சியமைக்கப்பட்டிருக்கும். இத் திரைப்படம் வெளியாகி சுமார் ஐந்து தசாப்தங்கள் கடந்துள்ள நிலையில் குறித்த தொழில்நுட்பம் சாத்தியமாவது உறுதியாகியுள்ளது. அதாவது மனிதனின் DNA ஐ பயன்படுத்தி மிக நுண்ணிய ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.இந்த ரோபோக்கள் மனித உடலில் மருந்துகளை பரிமாற்றம் செய்வதற்காக பயன்படுத்தப்படவுள்ளன. ஒவ்வொரு ரோபோக்களும் 53 நியூக்கிளியோரைட்டுக்களைக் கொண்ட தனியான DNA இனால் உருவாக்கப்படவுள்ளது.

Read More

iPhone X கைப்பேசி மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாததற்கான காரணங்கள்!

#iPhone #Mobile சில தினங்களுக்கு முன்னர் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது.இவற்றுள் iPhone X எனும் கைப்பேசியும் ஒன்றாகும். எனினும் இக் கைப்பேசியினை விடவும் iPhone 8 கைப்பேசிகளே மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளன. iPhone X கைப்பேசியானது மக்களை கவர முடியாமல் போனமைக்கு பிரதானமாக நான்கு காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. முன்னர் வெளியான ஐபோன்களில் காணப்பட்ட அனேகமான வசதிகள் iPhone X கைப்பேசியில் இல்லை என்பது முதலாவது குறைாகக் கூறப்படுகின்றது.இரண்டாவதாக விலை உயர்வாகக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்சுங் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்த Galaxy Note 8 கைப்பேசியானது iPhone X கைப்பேசியினையும் விட விலை குறைவாக காணப்படுகின்றது.அடுத்ததாக கைவிரல் அடையாளத்திற்குரிய ஸ்கானர் தரப்படாதமையும் மற்றுமொரு காரணமாக இருக்கின்றது. இது தவிர iPhone X கைப்பேசியின் வடிவம் ஆனது கவர்ச்சிகரமானதாக…

Read More