2 மாதங்கள் ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்தவில்லையா? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்

நீங்கள் ஆண்ட்ராய்டு பேக்கப் செய்யும் வழக்கத்தை கொண்டவரா? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி. உங்கள் போன் 60 நாட்களுக்கு எந்தவித இயக்கமும் இல்லாமல் இருந்தால் அதில் உள்ள ஆண்ட்ராய்டு பேக்கப் தானாகவே அழிந்துவிடும். கூகுளின் இந்த நடவடிக்கை குறித்து உங்களுக்கு எந்தவித முன்னெச்சரிக்கையும் தராமல் எடுக்கும் நடவடிக்கை என்பது ஒரு சோகமான விஷயம் ரெடிட் என்ற சமூக வலைத்தள பயனாளி ஒருவர் தனக்கு நேர்ந்த அனுபவம் ஒன்றை இதுகுறித்து பகிர்ந்துள்ளார். தன்னுடைய ஆண்ட்ராய்டு போனை அவர் இரண்டு மாதங்கள் பயன்படுத்தாமல் இருந்ததாகவும், எனவே அவருடைய ஆண்ட்ராய்டு பேக்கப் அனைத்தும் டெலிட் ஆகிவிட்டதாகவும் சோகத்துடன் தெரிவித்துள்ளார். டெலிட் ஆவது செயலிகள் மற்றும் செட்டிங்ஸ்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கூகுள் எந்தவித முன்னெச்சரிக்கை தகவலும் கொடுக்காமல் டெலிட் செய்தது தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இதுகுறித்து கூகுள்…

Read More