24ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது கதிர்காம கந்தனின் வருடாந்த ஆடி வேல் திருவிழா

வரலாற்றுப்பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தனாலயக் கொடியேற்றம் எதிர்வரும் 24ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறுமென கதிர்காம பஸ்நாயக்க நிலமே வி.ரி.குமாரகே தெரிவித்தார்.
இக்கொடியேற்றத்திருவிழா கதிர்காமம் பால்குடிபாவா பள்ளிவாசலில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. தீர்த்த உற்சவம் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நடைபெறுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.