3-டி செல்பி கமராவுடன் அறிமுகமாகவுள்ள ஐபோன் 8!

பல்வேறு புதிய சிறப்பம்சங்களுடன் இவ்வாண்டில்அறிமுகப்படுத்தப்பட உள்ள ஐபோன் 8, 3-டி வடிவில் ஒளிப்படங்களை பதிவு செய்யும் சசிறப்பு வசதி கொண்டதாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும், 5.8 இன்ச் டிஸ்ப்ளே, 3 ஜிபி ரெம், 64 ஜிபி மற்றும் 256 ஜிபி என இரண்டு நினைவக தெரிவுகள் (மெமரி ஒப்ஷன்கள்) போன்ற சிறப்பம்சங்களுடன் ஐபோன் – 8 அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7S மொடல்களின் தயாரிப்புகள் குறைக்கப்பட்டு, இம்முறை 300 சதவிகிதம் வரை கூடுதலான சாதனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

எனினும், ஐபோன் – 8, இதுவரை வெளியான ஐபோன்களைவிட விலை அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஐபோன் 8 தயாரிப்பிற்கு அப்பிள் நிறுவனம் தயாராகி வருகின்ற இந்த நிலையில், அண்மையில் ஐ-போன் 7 பிளஸ் வெடித்து சிதறியிருந்தமை வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் ஐபோன் – 8 விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் அஞ்சப்படுகிறது.