காரைதீவு பிரதேச முன்பள்ளி ஆசிரியர்களுக்கான செயலமர்வு

காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி. சுதர்சினி சிறிகாந்த் அவர்களின் வழிகாட்டலில் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு. விவேகானந்தராஜா அவர்களின் தலைமையில் காரைதீவு பிரதேச முன்பள்ளி ஆசிரியர்களுக்கான “முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி தர நியமங்கள்” அறிமுகப்படுத்தும் செயலமர்வு 19.05.2017 அன்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது, இந்நிகழ்வினை பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளீர் பிரிவு ஏற்பாடு செய்தது.

Read More

2019ஆம் ஆண்டு தொடக்­கம் ஜி.சீ.ஈ. உயர் தரப் பரீட்­சை­யை­யும், சாதா­ரண தரப் பரீட்­சை­யை­யும் ஒரே நேரத்தில்!

2019ஆம் ஆண்டு தொடக்­கம் ஜி.சீ.ஈ. உயர் தரப் பரீட்­சை­யை­யும், சாதா­ரண தரப் பரீட்­சை­யை­யும் ஒரே சம­யத்­தில் நடத்­து­வ­தற்­கான வழி­மு­றை­களை மேற்­கொள்­ளு­மாறு கல்­வி­ய­மைச்­சர் அகி­ல­வி­ராஜ் காரி­ய­வ­சம் அமைச்சு அதி­கா­ரி­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளார். கடந்த திங்­கள்­கி­ழமை கல்­வி­ய­மைச்­சில் நடை­பெற்ற கூட்­ட ­மொன்­றில் உரை­யாற்­றிய அமைச்­சர், இலங்­கை­யில் நடக்­கும் மிகப்­பெ­ரிய பரீட்­சை­க­ளான உயர்­தர, சாதா­ரண தரப் பரீட்­சை­களை ஒரே நேரத்­தில் நடத்­து­வ­தால் மாண­வர்­க­ளுக்­குப் பல்­வேறு அனு­கூ­லங்­கள் உள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார். அத்­து­டன், வெளி­நா­டு­க­ளுக்கு உயர் கல்­விக்­கா­கவோ தொழி­லுக்­கா­கவோ செல்­லும் இலங்­கை­யர்­க­ளின் நல­னைக் கருத்­திற்­கொண்டு அவர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் பரீட்­சைச் சான்­றி­த­ழின் பிர­தி­யொன் றைச் சம்­பந்­தப்­பட்ட தூத­ர­கத்­துக்கு வழங்­கு­மா­றும் அவர் அதி­கா­ரி­க­ளுக்­குப் பணிப்­புரை விடுத்­தார். இந்த நட­வ­டிக்­கை­யின் மூலம் வெளி­நாடு செல்­ப­வர்­கள் தங்­க­ளது பரீட்சை சான்­றி­தழ்­க­ளில் மோசடி செய்­வதை முற்­றா­கத் தடுக்­க­மு­டி­யு­மெ­ன­வும் அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

Read More

காலநிலை தொடர்பில் பொது மக்களுக்கு அவதான எச்சரிக்கை!!

நாட்டை சுற்றியுள்ள கடற் பகுதிகளில் மழை மற்றும் காற்று அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. சிறப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த நிலையம் இதனை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மன்னார் தொடக்கம் கொழும்பு / காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிரதேசங்களில்  மணிக்கு 60 தொடக்கம் 70 கிலோமீற்றர் வரை காற்றின் வேகம் விட்டு விட்டு அதிகரித்து வீசக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. காற்று ஏற்படும் போது , குறித்த கடற்பிரதேசங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். அதேபோல் குறித்த கடற்பிரதேசங்களில் கடும் மழைப் பொழிவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. மற்றைய கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வரை வீசக்கூடும் எனவும் , அதன் காரணமாக குறித்த பிரதேசங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என…

Read More

கல்லடியில் விபத்து: ஐவர் படுகாயம்

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய விபத்துச் சம்பவத்தில் ஐவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   இச்சம்பவம் நேற்றிரவு (திங்கட்கிழமை) 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து காத்தான்குடி நோக்கிவந்த இலங்கை போக்குவரத்துச்சபை டிப்போவுக்குச் சொந்தமான பேரூந்து கல்லடி பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது, வேகக்கட்டுப்பாட்டினை இழந்த முச்சக்கரவண்டி பேரூந்தின் பின்னால் மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.   மேற்படி விபத்தில் முச்சக்கரவண்டி முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன், குறித்த பேருந்தும் சிறிய சேதங்களுக்குள்ளானது. சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Read More

மட்டக்களப்பில் ஆலய மண்டபம் உடைந்ததில் 18 பேர் படுகாயம்!

மட்டக்களப்பு, ஆரையம்பதி முத்துமாரியம்மன் ஆலயத்தின் மண்டபம் இன்று மாலை இடிந்து விழுந்ததில் 18 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த ஆலயத்தின் மண்டப கட்டட பணிகள் நிறைவடைந்து அதற்கான பிளேட் கொங்ரீட் இடும் பணிகளின் போதே கட்டடம் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது கட்டடப்பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், அங்கிருந்து ஆறுபேர் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கட்டட இடிபாடுகளுக்குள் தேடுதல் பணிகள் இடம்பெற்று வருவதுடன், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இச் சம்பவத்தால் அப் பகுதி சோக மயமாக காட்சியளிக்கிறது.  

Read More

கண்ணகி அறநெறி பாடசாலையில் இடம்பெற்ற திருநாவுக்கரசு நாயனாரின் குரு பூசை நிகழ்வு

விவேகானந்தா விளையாட்டு கழகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணகி அறநெறிப்பாடசாலையில் நேற்று(14) திருநாவுக்கரசு நாயனாரின் குருபூசை நிகழ்வானது கழக செயலாளர் கோ.உமாரமணன் தலைமையில் கழக தலமை காரியாலயத்தில் இடம்பெற்றது.நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திருமதி.சத்தியவதி சாந்தலிங்கம் (ஓய்வுபெற் முகாமைத்துவ உதவியாளர்) அவர்களும், கௌரவ அதிதியாக திருமதி.சுஜித்ரா சதிஸ்ராஜ் (இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.நிகழ்வின் போது சுவாமிக்கான பூசைவழிபாடும் அதனைதொடர்ந்து மாணவர்களினால் வரவேற்பு நடனம், சுவாமியினைப்பற்றிய சொற்பொழிவும் நிகழ்த்தபட்டது.இறுதியாக ஆசிரியர் ஜெயரதி அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றது.                  

Read More

வீரமுனை இராம கிருஷ்ண மகாவித்தியாலயத்தில் புதிய கட்டிடத்திற்கு நேற்று அடிக்கல் நடப்பட்டது!

வீரமுனை இராம கிருஷ்ண மகா வித்தியாலயத்தின் புதிய  கட்டிடத்திற்கு  அடிக்கல் நாட்டு விழாவானது நேற்று (12.05.2017) பாடசாலை அதிபர் எஸ்.கோணேஷமூர்த்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.   இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி அவர்கள் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  மு.இராஜேஸ்வரன் அவர்களும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  த.கலையரசன் அவர்களும் கௌரவ அதிதிகளாகவும், சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாப்.எம்.எஸ்.எஸ்.நஜீம் அவர்கள் விஷேட அதிதியாகவும்  மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர் என பலர்   கலந்து சிறப்பித்தனர்.                    

Read More

கல்முனை பொலிசில் வெசாக்: சர்வதேச வெசாக்தின விழாவிற்கு வாழ்த்துப்பதாதை!!

கல்முனைப்பொலிசார் வெசாக்தினத்தையொட்டி புதன்கிழமை வெசாக்கூடுகளையும் பௌத்த கொடிகளையும் பறக்கவிட்டதுடன் நீராகாரம் வழங்கினர்.   பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் சர்வதேச வெசாக்தினவிழாவிற்கு வாழ்த்துத்தெரிவித்து பதாதை வைக்கப்பட்டிருந்தது.  

Read More

முதலையிடம் அகப்பட்டு இளைஞர் பலி

மட்டக்களப்பு, முறுத்தானைப் பிரதேசத்திலுள்ள  ஆற்றில் நீராடிய  இளையதம்பி தங்கராஜா (வயது 20) என்ற இளைஞர் முதலையிடம் அகப்பட்டு, மரணமடைந்துள்ளார்.   நண்பர்களுடன் நேற்று மாலை முறுத்தனை ஆற்றில் நீராடிய வேளையில் இவரை முதலை பிடித்துள்ளது.       இதனையடுத்து நண்பர்களும் உறவினர்களும்   அவரைக் காப்பாற்றுவதற்கு முயற்சித்தபோதும் அது பலனளிக்கவில்லை.   இந்நிலையில், அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Read More

கல்முனை வலயத்தின் இவ்வாண்டிற்கான தமிழ்த் தினப்போட்டிகள்

    கல்முனை வலயத்தின் இவ்வாண்டிற்கான தமிழ்மொழித்தினப் போட்டிகள் நேற்று(09) கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசியபாடசாலையின் சிசிலியா மேரி அரங்கில் கல்முனை வலயத்தின் பிரதிக்கல்வி பணிப்பாளர் பீ.எம்.வதுர்தீன் தலைமையில் நடைபெற்றது. கல்முனை வலயத்தில் உள்ள 40 பாடசாலைகள் கலந்து கொள்ளும் தமிழ் மொழி தினப்போட்டிகள் கல்முனை வலயத்தின் தமிழ் பிரிவிற்கு பொறுப்பான உதவிக்கல்வி பணிப்பாளர் கே.வரதராஜனின் நெறிப்படுத்தலில் கீழ் அனைத்து நிகழ்வுகளும் நடைபெற்றது. நாற்பது பாடசாலைகள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் தனி நிகழ்வுகள் 22 உம், குழு நிகழ்வுகள் 10 உம் நேற்று(09) நடைபெற்றதோடு ஏற்கனவே 14 நிகழ்வுகள் நடைபெற்று முடிந்துள்ளன. மேலும் வலயமட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கான மாவட்ட மட்டப்போட்டிகள் சம்மாந்துறை அல்.மர்ஜீம் மகளீர் கல்லூரியில் எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது. குறிப்பாக இம்முறை புதிதாக பொத்துவில் உப…

Read More

கல்முனையில் வெசாக் தின நிகழ்வுகள்!

  நேற்று வெசாக் தினத்தை முன்னிட்டு கல்முனை சுபத்திராம விகாரையில் சங்கைக்குரிய ரன்முத்துகல சங்கரத்தின தேரர் தலைமையில் மதவழிபாடுகளும் வெசாக் தின நிகழ்வுகளும் நடைபெற்றன.   இதில் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டு பூசை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.   கல்முனை இராணுவ முகாமின் ஏற்பாட்டில் தேனீர் உபசாராமும் நிகழ்வு ஒழுங்கும் நடைபெற்றது.   அத்துடன் வெசாக் அலாங்காரா தோரணங்களை காண்பதற்காக பிரதேச மக்கள் வந்துசெல்கின்றனர். மத வழிபாடுகள் தமிழிலும் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.  

Read More

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஓர் அறிவித்தல்!

  கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை தற்போது வழங்கப்படுவதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.   இது வரையில் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் தமது விண்ணப்பங்களை கூடிய விரைவில் அனுப்பி வைக்குமாறு அதிபர்கள் கேட்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.   இதேவேளை, குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.   இந்த திகதிக்கு பின்னர் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.   புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கு அமைய எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

நற்பிட்டிமுனை சிறுமி கீர்த்தனா பரிதாப மரணம்!

நற்பிட்டிமுனையைச் சேர்ந்த  புவனேந்திரன் கீர்த்தனா எனும் 14 வயது  சிறுமி இன்று உயிரிழந்தார். நேற்று பாடசாலை முடிந்து வரும்போது மயங்கி விழுந்த நிலையில் சிகிச்சைக்காக கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பயனளிக்காமல் இன்று உயிரிழந்துள்ளார். கல்முனை உவெஸ்லி உயர் தரப்பாடசாலையில் தரம் 11 கல்வி கற்று வருகிறார்.  தலைப் பகுதியில் உள்ள நரம்பு வெடிப்பு காரணமாக இச் சிறுமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Read More