நீல திமிங்கிலம் விளையாடிய பொறியியலாளர் தூக்கிட்டுத் தற்கொலை

சென்னையில் நீல திமிங்கிலம் விளையாடிய பொறியியலாளர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் காவற்துறை மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த நபர் எழுதிய கடிதமொன்று காவற்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்காரணமாக , இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்த்தியுள்ளது. சென்னை செங்குன்றத்தை அடுத்த அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட பழைய அலமாதி சிவன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. அப்பகுதியில் டீ கடை நடத்தி வரும் இவருக்கு, தினேஷ் (வயது 26) என்ற மகன் உள்ளார். அவர் பொறியியல் பட்டப்படிப்பை மேற்கொண்டவர். மும்பையில் உள்ள ஒரு தனியார் கம்பனியில் கடந்த 2 வருடங்களாக வேலை செய்து வந்துள்ளார். கடந்த 30ஆம் திகதி தீபாவளிக்காக விடுமுறையில் தனது வீட்டுக்கு வந்துள்ளார். தீபாவளி பண்டிகையை பெற்றோருடனும், நண்பர்களுடனும் கொண்டாடியுள்ளார். ஆனால் மும்பையில் இருந்து வந்ததில் இருந்து அவர், கைப்பேசியில்…

Read More

தமிழகத்தில் ஒரு குடும்பமே தீக்குளித்த அவலம் – மூன்று பேர் பலி!

அநியாயவட்டி (கந்துவட்டி) தொல்லையால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நான்கு பேரில் தாய் மற்றும் பெண் பிள்ளைகள் இருவரும் உயிரிழந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகம், நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன் கந்து வட்டி கொடூரம் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர். நெல்லை மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்தவர், இசக்கிமுத்து. இவர் கூலி வேலை செய்து வருகிறார். அவர் மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு மதி சரண்யா என்ற 5 வயது குழந்தையும் அட்சய பரணிகா என்ற ஒன்றரை வயது குழந்தையும் உள்ளனர். இவர்கள் குடும்ப தேவைக்காக காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்ற பெண்ணிடம் 1.50 லட்சம் பணம் கடனாக வாங்கியுள்ளார். முத்துலட்சுமியும் அவர் குடும்பத்தினரும் இசக்கிமுத்துவை தொடர்ந்து மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக அச்சன்புதூர் காவல்நிலையத்தில்…

Read More

சைட்டம் தொடர்பிலான நிலைப்பாடு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் ; ஜனாதிபதி

சைட்டம் நிறுவனம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். அனைத்து பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண முடியும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். தெஹியோவிட, திம்பிரிபல ஸ்ரீ அபிநவாராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தங்க வேலியை திறந்துவைக்கும் புண்ணிய நிகழ்வில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். சிறந்ததோர் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு பிரிவினை தடையாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டில் ஏற்படும் பிரச்சினைகளிலும் அபிவிருத்தி செயற்பாடுகளிலும் பிரிந்து நிற்காது அனைவரும் ஒன்றிணைந்து கூட்டாக பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டு நாட்டை வறுமையிலிருந்து விடுவிப்பதற்காக தேசிய உணவு உற்பத்தி ஆண்டாக பிரகடனப்படுத்தியுள்ளதுடன், கிராமிய மக்களை வறுமையிலிருந்து விடுவித்து அவர்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காகவும் நாட்டின் சுபீட்சத்திற்காகவும் கிராம சக்தி மக்கள்…

Read More

ஏலியன் பூச்சிகளோடு கரை ஒதுங்கிய படகு.. .. கலக்கத்தில் விஞ்ஞானிகள்!!

2011ல் ஜப்பானில் ஏற்பட்ட சுணாமியில், அடித்துச் செல்லப்பட்ட 10 அடி நீளமான படகு. 2017ம் ஆண்டில் ஹவ்வாய் தீவில் கரை ஒதுங்கியுள்ளது. அது கடந்த 6 வருடங்களாக பசுபிக் பெருங்கடலை கடந்து வந்துள்ளதோடு. அதில் பல வகையான பூச்சிகள் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவை பூமியில் இதுவரை கண்டு பிடிக்கப்படாத உயிரினங்கள் ஆகும். இதனை பார்த்த மீனவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுக்க, விஞ்ஞானிகளும் பொலிசாருமாக சேர்ந்து அதனை கரைக்கு கொண்டுவந்துள்ளார்கள். இந்த நிலையில், அதனை சோதனை செய்த விஞ்ஞானிகள் வியப்பில் உள்ளார்கள். இதுவரை காலமும் அவர்கள் கண்டிராத சில அரியவகையான கடல் இனங்களும். சில பூச்சிகளும் குறித்த படகிலுள்ளது. இவை ஏன்ன இனத்தை சார்ந்தவை என வகை பிரிக்க முடியாமல் அவர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. உலகில் பல அதிசயங்கள் உள்ள ஒரே இடம் கடல் தான் ……

Read More

இணையத் துறையில் சாதித்து குறுகிய காலத்தில் கோடீஸ்வரராகிய இலங்கை இளைஞன்!!

மாத்தளை – வில்கமுவ பிரதேசத்தில் இருமுறை உயர்தரத்தில் தோல்வியடைந்து கோடீஸ்வரராகிய இளைஞர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. வில்கமுவ பிரதேசத்தில் பிறந்து தந்தையின் தொழில் காரணமாக கண்டி பிரதேசத்திற்கு சென்ற லசந்த விக்ரமசிங்க என்ற இளைஞரே இவ்வாறு கோடீஸ்வரராகியுள்ளார். இவர் மாத்தளை, பாடசாலைகள் சிலவற்றில் கற்றவர், கண்டி தர்மராஜ வித்தியாலயத்தில் கல்வியை நிறைவு செய்தார். கண்டி தர்மராஜா வித்தியாலயத்தில் கணித பிரிவில் உயர்தரம் கற்றுள்ளார். இருமுறை உயர்தரம் பரீட்சை எழுதியும் அவரால் சித்திபெற முடியவில்லை. இறுதியில் லசந்த முகாமையாளர் பட்டப்படிப்பை தெரிவு செய்துள்ளார். 2006ஆம் ஆண்டு அவர் முகாமைத்து பிரிவில் தொழில் பெற்றார். எனினும் அந்த தொழில் தனக்கு பொருத்தமானதாக இல்லை என எண்ணினார். தொழில் செய்து கொண்டிருந்த சந்தர்ப்பங்களில் அவர் இணையத்தில் சற்று நேரத்தை செலவிட்டுள்ளார்.அப்போதைய காலப்பகுதியில் இணையத்தில் பணம் தேடுவதென்பது புதிய விடயமாக காணப்பட்டது. அதனை…

Read More

அமெரிக்காவின் மாநில ஆளுனர் பதவிக்கு இலங்கைத் தமிழ்ப் பெண் போட்டி?

அமெரிக்காவின் மேரிலன்ட் மாநில ஆளுனர் பதவிக்கு இலங்கைத் தமிழ்ப் பெண் கிரிசாந்தி போட்டி? அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணியான மிச்சேல் ஒபாமாவின், கொள்கைப் பணிப்பாளர்களில் ஒருவராக இருந்த இலங்கைத் தமிழ்ப் பெண்ணான,கிரிசாந்தி விக்னராஜா, மேரிலன்ட் மாநில ஆளுனர் பதவிக்குப் போட்டியிடவுள்ளார் என்று கூறப்படுகிறது. மேரிலன்ட் மாநில ஆளுனர் பதவிக்கான தேர்தலில் களமிறங்குவது பற்றி தாம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக, அமெரிக்க வாழ் இலங்கைத் தமிழ்ப் பெண்ணான கிரிசாந்த விக்னராஜா, வொசிங்டன் போஸ்ட் நாளிதழிடம் தெரிவித்துள்ளார். பலர் என்னைக் களமிறங்குமாறு ஊக்குவிக்கிறார்கள், இதுபற்றி நான் தீவிரமாக ஆலோசித்து வருகிறேன் என்று, 37 வயதான, கிரிசாந்த விக்னராஜா, வொசிங்டன் போஸ்ட் செய்தியாளருக்கு தகவல் அனுப்பியுள்ளார். இலங்கைத் தமிழ்ப் பெற்றோரின் மகளான கிரிசாந்தி மேரிலன்ட் ஆளுனர் பதவிக்குப் போட்டியிடுவதை அங்குள்ள தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த அமெரிக்கர்கள் வரவேற்றுள்ளனர். “கிரிஸ் மிகச் சிறந்த…

Read More

இலங்கை தொடர்: இந்திய அணியில் மீண்டும் முரளி விஜய், அஸ்வின்

இலங்கை அணி இந்திய மண்ணில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடவுள்ளன. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை இன்று பிசிசிஐ அறிவித்தது. காயம் காரணமாக சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த முரளி விஜய் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தொடக்க வீரர் இடத்துக்கு முரளி விஜய் அணிக்கு திரும்பியதையடுத்து தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு வீரரான அபினவ் முகுந்த் நீக்கப்பட்டுள்ளார். இஷாந்த் ஷர்மாவுக்கு மீண்டும் அணியில் இடம்கொடுத்துள்ளது பிசிசிஐ. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான 16 வீரர்கள் கொண்ட பட்டியல்:- விராட் கோலி (கேப்டன்), ஷிகர் திவான், கே. எல்.ராகுல், முரளி விஜய், சதீஸ்வர் புஜாரா, அஜின்கியா ரகானே (துணை கேப்டன்), ரோஹித் ஷர்மா, விருத்திமான் சாகா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஹர்திக்…

Read More

ஒரே நாளில் ஸ்குவாஷ் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த தம்பதி

உலக விளையாட்டு வரலாற்றில் முதன் முறையாக ஒரு பெரும் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்கள் பிரிவில் கணவனும், பெண்கள் பிரிவில் மனைவியும் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளனர். அமெரிக்கா ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்கள் பிரிவில் அலி ப்ராங் என்பவரும் அதே போட்டியின் பெண்கள் பிரிவில் அவரது மனைவி நௌர் எல் தயெப் என்பவரு பட்டம் வென்றனர். இரண்டு பிரிவின் இறுதிப் போட்டியும் ஒரே நாளில் நடந்தது. சனிக்கிழமை நடந்த போட்டியில் 24 வயதான எல் தயெப், மகளிர் பிரிவில் ரணீம் எல் வெளிலியை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தினார். அதே நாளில், அவர் கணவரான 25 வயதான ப்ராங், சில மணிநேரங்கள் வித்தியாசத்தில், ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில் முகமது எல் ஷோற்பகியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தினார். கடந்த ஆண்டு திருமணம் செய்துக்…

Read More

பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பை இடைநீக்கம் செய்தது ஃபிஃபா; காரணம் என்ன?

பி எஃப் எஃப் எனப்படும் பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பில் தேவையற்ற மூன்றாம் தரப்பு குறுக்கீடு இருக்கும் காரணத்தால் கூட்டமைப்பை இடைநீக்கம் செய்வதாக உலகக் கால்பந்து கூட்டமைப்பு(ஃபிஃபா) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஃபிஃபா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், கடந்த 10 ஆம் தேதி ஃபிஃபா ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றதாகவும், அதில் எடுக்கப்பட்ட முடிவை அடிப்படையாக கொண்டு பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பை உடனடியாக இடைநீக்கம் செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது. காரணம் என்ன? பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பை நீக்கியதற்கான காரணத்தையும் செய்திக்குறிப்பில் ஃபிஃபா சுட்டிக்காட்டியுள்ளது. அதில், பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பின் அலுவலகம் மற்றும் அதன் கணக்குகள் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகியின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், ஃபிஃபா விதிமுறைகளின்படி கூட்டமைப்பின் விவகாரங்கள் மூன்றாம் நபர் தலையீடின்றி சுதந்திரமாக இயங்கவேண்டும். இந்த விதிக்கு மாறாக இது அமைந்திருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பின் அலுவலகம் மற்றும் கணக்குகளை நிர்வகிக்கும் உரிமை முழுமையாக…

Read More

இலங்கை டி 20 கேப்டன் தரங்க பாகிஸ்தான் செல்ல மறுப்பு: புதிய கேப்டன் பெரேரா?

இலங்கை டி 20 அணியின் கேப்டன் உபுல் தரங்க மற்றும் தினேஷ் சந்திமால், மலிங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ் உள்ளிட்ட மூத்த வீரர்கள் இலங்கை அணியின் திட்டமிட்ட பாகிஸ்தான் பயணத்தில் இருந்து விலகுவார்கள் என பிபிசி சிங்கள சேவைக்கு தெரியவந்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர்களின் பேருந்து 2009-ல் லாகூரில் தாக்கப்பட்ட பிறகு அவர்கள் முதல்முறையாக பாகிஸ்தானில் விளையாடுவார்கள் என்றும், பாகிஸ்தானில் எடுக்கப்பட்டுள்ள கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முழுமையாக திருப்தி அடைந்த பிறகே இம்முடிவை எடுத்ததாக திங்களன்று இலங்கை கூறியிருந்தது. அக்டோபர் 29-ம் தேதி லாகூர் கடாபி மைதானத்தில் நடக்க உள்ள சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் மோத உள்ளது. ஆனால் தரங்க ,சந்திமால், மலிங்கா, மேத்யூஸ் உள்ளிட்ட வீரர்கள் பாதுகாப்பு காரணங்களை காட்டி விளையாட மறுத்துள்ளனர். இதன் விளைவாக, முழு டி20 தொடருக்கும் இவர்கள்…

Read More

இரவில் நல்ல தூக்கம் வேண்டுமா? அப்ப தூங்கும் முன் இதுல ஒரு டம்ளர் குடிங்க…

நம்மில் ஏராளமானோர் நிம்மதியான தூக்கம் கிடைக்க பெறாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். மனிதனுக்கு போதிய தூக்கம் கிடைக்காவிட்டால் அதனால் ஏராளமான உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதற்கு முக்கிய காரணம் வாழும் மோசமான வாழ்க்கை முறையும், மன அழுத்தமும் தான். ஒருவருக்கு தூக்க பிரச்சனை இருந்து, அதை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால், அதனால் பெரும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். ஆகவே தூங்குவதில் பிரச்சனையை சந்தித்தால், அதனை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள். இங்கு இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும் சில பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஏதேனும் ஒன்றை இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் குடித்தால், இரவில் நல்ல தூக்கம் கிடைக்கும். செர்ரி ஜூஸ் இந்த செர்ரி ஜூஸை காலையிலும், இரவிலும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், செர்ரியில் உள்ள அதிகப்படியனா மெலடோனின் என்னும் ஹார்மோன் தூங்கி-எழும்…

Read More

உங்கள் கல்லீரலை சுத்தப்படுத்தும் உணவுகள் என்னென்ன தெரியுமா? முக்கியமாய் படியுங்க தோழர்களே!

நம் உடலில் உள்ள கல்லீரல் என்பது நம் வீட்டிலுள்ள அம்மாவைப் போல். எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்யும். வீட்டில் அம்மா உடம்பு சரியில்லாமல் படுத்துக் கொண்டால்தான் நமக்கு அம்மாவின் அருமையே தெரியும். அதேபோலத்தான், கல்லீரலுக்கு அளவுக்கு அதிகமாய் வேலை கொடுத்தால், சீக்கிரம் சோர்ந்து விடும். இது மொத்த உடலையே பாதிக்கும். ஏனெனில் நம் உடலில் மொத்த இயக்கங்களும், தேவையான எனர்ஜியையும் சத்துக்களையும்,கல்லீரலிடமிருந்துதான் பெறுகிறது. உணவினை ஜீரணப்படுத்தி, சத்துக்களை பிரித்தெடுத்து, எல்லா பாகங்களுக்கும் அனுப்புகிறது.அதுமட்டுமில்லாமல், வேண்டாத கழிவுகளையும் வெளியேற்றும் பொறுப்பும் கல்லீரலுக்கு உண்டு. அளவுக்கு அதிகமான உணவுகளை, எளிதில் ஜீரணமாகாத கொழுப்பு உணவுகளை எல்லாம் இஷ்டப்படி சாப்பிட்டு கல்லீரலுக்கு வேலைகள் கொடுத்துக் கொண்டே இருந்தால் அது சோர்ந்து போகத்தானே செய்யும். அதன் வேலையை நாம் பாதியாக்க, அளவான உணவு உண்டால் போதும். மேலும் கல்லீரலை நாம்…

Read More

ஏன் தினமும் ஒரு முட்டை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்கள்!

முட்டை ஆரோக்கியமான உணவு என்பது தெரியும். ஆனால் ஏன் ஆரோக்கியம் எனக் கேட்டால் புரோட்டீன் உள்ளது, அதனால் நல்லது என சொல்வீர்கள். உங்களுக்கு தெரியாததையும் இங்கே படித்து தெரிந்து கொள்ளுங்கள். முட்டை ஒரு முழுமையான சத்து நிறைந்த உணவு.முட்டையில் அதிக அளவு புரோட்டின், வைட்டமின், மினரல், மற்றும் நல்ல கொழுப்பு ஆகியவைகளைக் கொண்டுள்ளது. தினமும் காலை வேளையில் குழந்தைகளுக்கு ஒரு முட்டை கொடுப்பது மிகவும் நல்லது. உடல் நலத்திற்கு தேவையான எதிர்ப்பு சக்தி கொடுத்து, ஊட்டம் அளிக்கிறது முழு முட்டையிலும் உள்ள சத்துக்கள் : முழு முட்டையிலும், வைட்டமின் ஏ, பி12, பி2, பி5, ஆகிய வைட்டமின்களும், செலினியம், ஜிங்க், பொட்டாசியம், ஃபோலேட் என்கின்ற மினரல்களும், உள்ளன. இதன் கலோரி அளவு-77, கொழுப்பு-5கிராம், புரோட்டின்-6 கிராம் ஆகிய சத்துக்களை ஒரு முழு முட்டை உள்ளடக்கியது. முட்டையில் உள்ள…

Read More

டைப் 2 சர்க்கரை வியாதிக்கு பலன்களைத் தரும் மூலிகைகளை தெரிந்து கொள்ள இதைப் படியுங்கள்

சர்க்கரை வியாதியில் டைப் 1 மற்றும் டைப் 2 டயாபடிஸ் என்று வகைப்படுத்தலாம். ரத்தத்தில் குளுகோஸ் அளவை கட்டுப்படுத்துவது இன்சுலின் என்ற ஹார்மோன் தான். அந்த ஹார்மோன் சுரக்காமலிருந்தால், ரத்தத்தில் குளுகோஸின் அளவு அதிகமாகும். இந்த வகை சர்க்கரை வியாதிக்கு, டைப் 1 டயாபடிஸ் என்று பெயர். இதே இன்சுலின் உடலில் சுரந்தாலும் அது செயல்படாமல் இருந்தால் ரத்தத்தில் சர்க்கரையில் அளவை அதிகரிக்கச் செய்யும். இந்த மாதிரியான சர்க்கரை வியாதி டைப் 2 டயாபடிஸ் என்று பெயர். எந்த வயதிலும் வரலாம். இந்த வியாதி மரபு சார்ந்தும் வரலாம். டைப் 2 டயாபடிசின் அறிகுறிகள் : உடல் எடை திடீரென இளைக்கும், எனர்ஜி குறைந்து காணப்படுவார்கள், அடிக்கடி சிறு நீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும், தாகம் எடுத்துக் கொண்டேயிருக்கும். கண்பார்வை குறைதல் என இவை…

Read More

உங்களுக்கு அதிகளவு கோபத்தை வரத் தூண்டும் உணவுப் பொருட்கள்!

அனைவருக்குமே ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதாலும், உடற்பயிற்சியில் ஈடுபடுவதாலும், மன அமைதி கிடைத்து, சந்தோஷத்தை உணர முடியும் என்பது தெரியும். ஆனால் ஒருசில உணவுகளை உட்கொண்டால், அவை மனநிலையைக் கெடுப்பதோடு, எரிச்சலையும், கோபத்தையும் தூண்டும். எனவே ஏற்கனவே உங்களுக்கு மூக்கிற்கு மேல் கோபம் வருமாயின், கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை மட்டும் தயவு செய்து சாப்பிடாதீர்கள். சரி, இப்போது உங்களுக்கு அதிகளவு கோபத்தை வரவழைக்கும் உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போம். காரமான உணவுகள் காரமான உணவுகளை மன அழுத்தத்தில் இருக்கும் போது உட்கொண்டால், அதனால் இரைப்பையில் அமில சுரப்பு அதிகரித்து, அதனால் நெஞ்செரிச்சலை உணரக்கூடும். மேலும் காரமான உணவுகள், உடலின் வெப்பத்தை அதிகரிப்பதால், அது உங்கள் பரபரப்புடன் இருக்கச் செய்யும். ட்ரான்ஸ் கொழுப்புக்கள் கலிபோர்னியாவில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், அதிகளவு ட்ரான்ஸ் கொழுப்புக்களை உட்கொண்டால், அதிகளவு கோபத்தை வெளிப்படுத்தக்கூடும்…

Read More