கிருஷ்ண​ ஜெயந்தி பூசையும்,தொட்டிலில் தாலாட்டும் நிகழ்வும்!

காரைதீவு ஸ்ரீ மகா விஷ்னு ஆலயத்தில் ஸ்ரீ கிருஷ்ண​ ஜெயந்தியை முன்னிட்டு இந்து சமய​ விருத்திச்சங்கத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் இருந்து பாற்குடபவனியானது ஆரம்பித்து கொம்புச்சந்தியினை அடைந்து அங்கு உறி அடித்தல் விழாவானது மிகச்சிறப்பான முறையில் இடம்பெற்று அதன் பின் தேரோடும் வீதி வழியாக ஆலயத்தை அடைந்து ஸ்ரீ கிருஷ்ண​ ஜெயந்தி பூசையும்,தொட்டிலில் தாலாட்டும் நிகழ்வும் இனிதே நடைபெற்றது அதன் பின் அன்னதானமும் நடைபெற்று முடிவடைந்தது. இதன் போதான படங்கள்..

Read More

கிருஷ்ண​ ஜெயந்தியை முன்னிட்டான பாற்குடபவனி…

காரைதீவு ஸ்ரீ மகா விஷ்னு ஆலயத்தில் ஸ்ரீ கிருஷ்ண​ ஜெயந்தியை முன்னிட்டு இன்று 12.09.2017 இந்து சமய​ விருத்திச்சங்கத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் இருந்து பாற்குடபவனியானது ஆரம்பித்து கொம்புச்சந்தியினை அடைந்து அங்கு உறி அடித்தல் விழாவானது மிகச்சிறப்பான முறையில் இடம்பெற்று அதன் பின் தேரோடும் வீதி வழியாக ஆலயத்தை அடைந்தது. இதன் போதான படங்கள்….

Read More

வெகு சிறப்பாக நடைபெற்ற VSC யின் கல்விச்சாதனையாளர்கள் பாராட்டுவிழா…

காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகத்தினால் காரைதீவு பிரதேசத்திற்கு புகழைப்பெற்றுத்தந்த கல்விச்சாதனையாளர்களைப் பாராட்டும் விழா இன்று(13) ஞாயிற்றுக்கிழமை காரைதீவு விபுலானந்தா ஞாபகார்த்த மணி மண்டபத்தில் கழக தலைவர் திரு.S.நேசராஜா தலமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இன் நிகழ்விற்கு பிரதம அதிதியாகளாக அம்பாறை மாவட்ட பா.உ கெளரவ.க.கோடீஸ்வரன் மற்றும் மட்டு மாவட்ட பா.உ கெளரவ ஞா.சிறிநேசன் அவர்களும் கலந்து சிறப்பித்தார். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்கள் க.பொ.த.சா.த பரீட்சையில் 9ஏ பெற்ற மாணவர்கள் ,க.பொ.த. உ.த. சாதனையாளர்கள் உள்ளிட்டோர் கௌரவிக்கப்பட்டனர். இவ்விழாவிற்கு விசேடமாக சாதனைபடைத்த மாணவர்களின் பெற்றோர்களும் அழைக்கப்பட்டிருந்தமை ஏற்பாட்டுக் குழுவைப் பாராட்ட வைத்தது. படங்கள்-டினஸ்ரன் மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்

Read More

சிவராத்திரி தினத்தில் திருக்கோணேச்சரம் ஆலயத்தில் மக்கள் வெள்ளம்

சிவராத்திரி விரதத்தை உலகெங்கும் வாழும் இந்துக்கள்  விரதத்தை அனுஷ்டித்தனர். கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான திருக்கோணேச்சரம் ஆலயத்திலும் இரவு முழுவதுமாக கண் விழித்திருந்து சிவராத்திரி விரதத்தை அனுஷ்டித்தனர். மேலும் ஆலயத்தில் விஷேட பூஜைகளும் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. நாட்டின் பலபாகங்களிலும் இருந்து வருகைதந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர். இதன் போதான படங்களை இங்கே காணலாம்              

Read More