இலங்கையில் சூறாவளி அபாயம் ; வானிலை அவதான நிலையம்

வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கத்தினால் இலங்கையில் சூறாவளி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் ஆர்.ஜயசேகர தெரிவித்துள்ளார். வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் வடக்கு திசை நோக்கி நகர்ந்தால் மணிக்கு 80கி.மீ. வேகத்தில் காற்று வீசி சூறாவளியை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளதாக அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்படி தகவல் பணிப்பாளரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியிலுள்ள தாழமுக்கம் வலுவடைந்து சூறாவளியாக மாறி வடக்கு திசையை நோக்கி நகர்ந்து வங்காள தேசம் வரை பயணிக்கும் என்று வானிலை அவதான நிலைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.   அதன் காரணமாக இலங்கையில் சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், தென் மாகாணம் போன்ற பகுதிகளில் காற்றின் வேகம் மிகவும் அதிகரித்துக்…

Read More

ஒருவர் விரைவில் இறக்க போகிறார் என்பதை வெளிகாட்டும் முதல் அறிகுறி இதுதானாம்!

புதிய ஆய்வொன்றில், நுகரும் உணர்வை இழப்பது, மரணத்தை குறிக்கும் அறிகுறிகளில் ஒன்று

Read More

மனிதர்களுக்கு நிரந்தர குளிர்ச்சியை தரும் புங்கன் மரம்.

புங்கை அல்லது புங்கு என்னும் இத்தாவரம் வெப்பமண்டலப் பகுதிகளா ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. இன்று மாநகரங்கள், நகரங்கள் மட்டுமல்ல, கிராமங்களில்கூட கொன்கிரீட் வீடுகள் அதிகரித்துவிட்டதால், சமூக காடுகள் குறைந்து நகரம், கிராமங்கள் யாவும் ‘கொன்கிரீட்’ காடுகளாகிவிட்டன. சமூக காடுகள் குறைந்ததால், வளிமண்டலத்தில் உள்ள காற்று மாசு அடைந்ததோடு, அதீத வெப்பமும் அடைந்திருக்கிறது. இயற்கை மீது நாம் இஷ்டத்திற்கு ‘கை’ வைத்ததால், இப்போது கடும் வறட்சி, பருவம் தவறிய மழை, அதிக பனிக்காற்று, அதிகமான வெயில் என்று பல பாதிப்புகளால் இயற்கை நம்மை பதம் பார்க்க ஆரம்பித்திருக்கிறது. எனவே, இனியும் இயற்கையை சீண்டாமல், நம்மால் முடிந்த அளவிற்கு வீடு, தெருக்களில் ‘புங்கன்’ வளர்த்து குறைக்கலாம். கொன்கிரீட் வீடுகளாலும், அவற்றில் இருந்து வெளியேறும் வேதியல் கூறுகளாலும், மரங்களை அழித்ததாலும் காற்று வெப்பமடைந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் வாகனங்களின் புகையால் காற்றின்…

Read More

மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் நான்கு சிசுக்களை பிரசவித்த தாய்

ஒரே பிரசவத்தில் நான்கு சிசுக்கள் பிரசுவித்த சம்பவம் ஒன்று நேற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. பொத்துவில் தாமரை குளத்தை சேர்ந்த உதயபானு ஐங்கரன் எனும் தாயே இவ்வாறு 4 பிள்ளைகளை பிரசுவித்துள்ளார் நேற்று அதிகாலை 4 மணியளவில் 3 பெண் குழந்தைகளும் 1 ஆண் குழந்தையும் பிரசுவித்துள்ளார். ஏற்கனவே இரு ஆண்பிள்ளைகள் இருப்பதாகவும் தற்போது 4 பிள்ளைகள் பிரசுவித்துள்ளதால் தனக்கு பாரிய பொருளாதார சுமை ஏற்பட்டுள்ளதாக பிள்ளைகளின் தந்தை தெரிவித்துள்ளார். இருப்பதற்கு கூட சரியான வசதியின்மையால் தங்களுக்கு உதவி செய்யுமாறு பிள்ளைகளின் தந்தை தெரிவித்துள்ளார். தகப்பன் – இ. ஐங்கரன் -‎776412160  

Read More

சனிக்கிரகத்தில் உயிர்கள் இருக்கலாம்: நாசா கண்டுபிடிப்பு

பூமிக்கு வெளியே உயிர்கள் வாழ்வதற்கு வாய்ப்புள்ள மிகச்சிறந்த இடமாக,, சனிக்கிரகத்தின் நிலவுகளில் ஒன்றான என்சலடஸ் இருக்கலாம் என்று வானியலாளர்கள் அறிஉவித்துள்ளனர். தனது பதின்மூன்று ஆண்டு பயணத்தின் இறுதி நிலையில் இருக்கும் கசினி என்கிற நாசாவின் விண்ணோடம், இந்த சனிக்கிரகத்து நிலவின் மேற்பரப்பிலிருந்து பீறிட்டு அடிக்கும் தண்ணீரை கண்டறிந்துள்ளது. அதனடிப்படையில் உயிர்கள் வாழ ஏதுவான சூழல் அங்கு நிலவக்கூடும் என்கிற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.

Read More

தினமும் 4 மணி நேரத்திற்கும் மேல் ஏ.சி அறையில் இருக்கிறீர்களா?

90-களில் ஒரு வீட்டில் ஏ.சி அவர் பெரிய செல்வந்தர் என்ற பெயர் இருக்கும். பணக்காரர் என்பதை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக ஏ.சி இருந்த காலம் அது. ஆனால், இன்று, ஏ.சி நடுத்தர குடும்பங்களிலும் கூட எளிதாக இடம்பெறும் ஒரு அத்தியாவசிய பொருளாக மாறி நிற்கிறது. பெரும்பாலான அலுவலகங்களில் நாம் ஏ.சி காண முடியும். ஷாப்பிங் மால், சூப்பர் மார்க்கெட் தொடங்கி, பியூட்டி பார்லர், ஹேர் ஸ்டைலிங் சலூன் என திரும்பும் பக்கம் எல்லாம் ஏ.சி கண்ணில் தட்டுப்படும் காலத்தில் தான் நாம் இப்போது வாழ்ந்து வருகிறோம். இதில் என்ன இருக்கிறது என கேட்கிறீர்களா? இதனால் உடல்நல கோளாறு பலவன உண்டாக வாய்ப்புகள் வெகுவாக இருக்கிறது…. ஈரப்பதம்! சமீபத்திய ஆய்வொன்றில், ஏ.சி அறைகளில் அதிக நேரம் செலவழிப்பதால் உடல் நல பிரச்சனைகள் அதிகரிக்கின்றன என மருத்துவர்களால் அறியப்பட்டுள்ளது. இதற்கு…

Read More

தொடர்ச்சியா 6 மணி நேரம் உட்காந்திட்டுருந்தா உடம்புக்கு என்னாகும் தெரியுமா?

நாள் பூரா உட்காந்துட்டு இருந்தா உங்க உடம்புக்குள்ள என்ன நடக்கும் ன்னு என்னைக்காவது யோசிச்சு இருக்கீங்களா? இதைப் படிச்சு தெரிஞ்சுகோங்க. நாள்பூராவும் அமர்ந்தபடி வண்டி ஓட்டறீங்களா? இல்ல கம்ப்யூட்டர் முன்னாடி தவம் கிடக்கறீங்களா? இல்ல எப்போதும் சும்மாவே உட்காந்துட்டு இருக்கீங்களா? உடலுக்கு தசை இயக்கம் நடக்கிறமாதிரி உழைப்பு கொடுத்துக்கிட்டே இருந்தால் நீண்ட ஆரோக்கியத்தோடு , திடமா வாழ முடியும். இப்படி நாள் பூரா உட்காந்துட்டு இருந்தா உங்க உடம்புக்குள்ள என்ன நடக்கும் ன்னு என்னைக்காவது யோசிச்சு இருக்கீங்களா? இதைப் படிச்சு தெரிஞ்சுகோங்க. 3 மணி நேரம் : நீங்க தொடர்ச்சியா 3 மணி நேரம் உட்காந்தா நிமிடத்திற்கு 1 கலோரி எரிய ஆரம்பிக்கும். உங்களோட ரத்த குழாய் சுருங்க ஆரம்பிக்கும். இன்சுலின் குளுகோஸை பிரிக்காது. இதனால் டைப்-2 டயாபடிஸ் வர ஆரம்பிக்கும்.   6 மணி நேரம்…

Read More

கருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்!

கருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்! குழந்தைகள் என்றாலே அழகு தான், அவர்களது சிரிப்பும், அழுகை, முக பாவனைகள், கொட்டாவி விடுவது, உறங்கும் நிலை என அனைத்தும் அழகு தான். ஆனால், கருவறைக்குள் இவற்றில் என்னென்ன செயல்களை எல்லாம் சிசு செய்யும் என உங்களுக்கு தெரியுமா? நாம் கூறிய இவற்றில் பெரும்பாலானவற்றை சிசு கருவறைக்குள்ளேயே செய்ய ஆரம்பித்துவிடும். இனிப்பு ஃப்ளுயிட்களை ரசித்து விழுங்குதல், அம்மாவின் குரலை கேட்டு அசைதல் என கருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள் நிறைய இருக்கின்றன. அவற்றை பற்றி இனிக் காணலாம்… *அழுகை* கருவில் இருக்கும் சிசுவை அல்ட்ராசவுண்ட் கருவி மூலம் ஆய்வு செய்த போது. வியக்க வைக்கும் வகையில். சிசு கருவறையில் அழுவது கண்டறியப்பட்டது. *பிணைப்பு* இரட்டையர்களுக்கு மத்தியில் இருக்கும் பிணைப்பு கருவறையிலேயே துவங்கிவிடுகிறது. மேலும், இரட்டையர்கள் கடைசி பத்து வாரங்களின் போது அம்மா…

Read More

மட்டக்களப்பில் உள்ள ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் !

மட்டு-அம்பாறை மாவட்டங்களின் பழைமையான பல ஊர்கள், இயற்கைக் காரணிகளான தாவரங்கள், புவியியல் அமைப்புக்களை வைத்தே பெயரிடப்பட்டிருக்கின்றன. மட்டக்களப்பு மான்மியம்(ம.மா) மக்கட்பெயரால் அமைந்த ஊர்களைப் பற்றியும் கூறுகிறது. சுவாரசியமான இந்தப் ஊர்ப்பெயர்களுக்கான காரணங்கள் கீழே! 1. அக்கரைப்பற்று –பழைய மட்டக்களப்பின் (சம்மாந்துறை) எல்லையான களியோடை ஆற்றின் அக்கரையில் இருந்த பற்று (நிர்வாகப்பிரிவு) ஆதலால் அக்கரைப்பற்று! இந்தப் பற்றின் தலைமைநகரே இன்றைய அக்கரைப்பற்று நகர். அதன் பழைய பெயர் கருங்கொடித்தீவு. கருங்கொட்டித்(ஓர் தாவரம்) தீவு என்பர். 2. அட்டாளைச்சேனை – அட்டாளை – சேனைக்காவலில் பயன்படும் உயரமான புரண்/காவலரண். “முல்லைத்தீவு” என்பது அட்டாளைச்சேனையின் பழைய பெயர். 3. ஆரையம்பதி – முன்பு ஆரப்பற்றை; இயற்கையாக நீரோடும் ஓடையை “ஆரப்பற்றை” என்னும் மட்டக்களப்புத் தமிழ். 4. சம்மாந்துறை – சம்பான்+துறை; சம்பான்= சிறுபடகுகள். பழைய மட்டக்களப்பு நகர் சம்மாந்துறையில் அமைந்திருந்தபோது, வாவிவழியே…

Read More

பாம்பின் விஷத்திற்கும், வெற்றிலைக்கும் இம்புட்டு சம்பந்தமா!……

ஆன்மீகத்திற்கு பயன்படும் வெற்றிலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. வெற்றிலைச்சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடன் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறுநீர் நன்கு பிரியும். வெற்றிலையை

Read More

உடலுக்கு ஆரோக்கியம் தரும் பச்சை நிற ஆப்பிள்!

பச்சை நிற ஆப்பிள்களில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் விட்டமின்கள் நிறைய இருப்பதால், ஒவ்வொருவரும் அன்றாட உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சை நிற ஆப்பிள் பழத்தில் தான் இயல்பாகவே பல்வேறு வகையான புரதங்கள், விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பச்சை ஆப்பிளில் நிறைய நார்ச்சத்துக்கள் இருப்பதால், குடலை சுத்தம் செய்வதிலும் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தினை அதிகரிக்கவும் செய்கிறது. எனவே இது தடையற்ற குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. பச்சை ஆப்பிள்கள் ஏராளமான தாதுக்களை கொண்டுள்ளது. அதிலும் ஆப்பிள்களில் இருக்கும் நுண்ணூட்டச் சத்தான இரும்புச்சத்து இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவை உயர்த்த உதவுகிறது. எடையை குறைக்க முயலுபவர்களுக்கு பச்சை ஆப்பிள் ஒரு சிறந்த உணவாக இருக்கிறது. அதிலும் அத்தகையவர்கள் ஒவ்வொரு நாளும் உணவில் ஒரு ஆப்பிளை சேர்க்க வேண்டும். மேலும் இது இரத்த நாளங்களில்…

Read More

உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மீன்கள்… எந்தெந்த மீன்கள் என தெரியுமா?

மீன்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வர அனைவரும் விரும்பி உண்ணும் உணவு. சிலர் அனைத்து வகை

Read More