அக்கரைப்பற்றில் யானை தாக்கி 63 வயதான நபர் உயிரிழப்பு

அக்கரைப்பற்று – அலிக்கம்பை வயல் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யானை தாக்குதலுக்கு இலக்காகி, பலத்த காயங்களுக்குள்ளான 63 வயதான நபர், அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Read More