அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மீண்டும் போராட்டம்!!

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதில் அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் வேலையற்ற பட்டதாரிகளின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக  விஷேட கலந்துரையாடலும்  கூட்டமும் மனிதச்சங்கிலி போராட்டமும்  09 திகதி காரைதீவு சுற்றுவட்டத்திற்கு அருகாமையில் நடைபெற்றது. இதன் போது அகில இலங்கை பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் சங்கைக்குரிய தன்னே ஆனந்த தேரர் மற்றும் அம்பாறை முஸ்லீம்  வேலையற்ற பட்டதாரிகளின் தலைவர் ஏ.ஜசீர் ஆகியோர் அடங்கலாக பலரும் கலந்து கொண்டது. இதன் போது கருத்துத் தெரிவித்த அகில இலங்கை பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் சங்கைக்குரிய தன்னே ஆனந்த தேரர் எதிர்வரும் தேர்தலில் முன்னர் பட்டதாரிகள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் அப்படி வழங்காவிட்டால் நாம் தேர்தலை முற்றிலும் புறக்கணிக்கப்போவதாகவும் இதனை உடனடியாக மத்திய அரசும் மாகாண அரசும் மிகவும் விரைவில் தீர்மானத்தை பெற்றுத்தரும்படியும் தெரிவித்தனர்.  

Read More