இன்றைய ராசிபலன் 13.08.2017

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து போகும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வெளி உணவை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். ரிஷபம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து போங்கள். நண்பர் ஒருவர் உங்களை உதாசீனப்படுத்தும் வகையில் நடந்துக் கொள்வார். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். போராடி வெல்லும் நாள். மிதுனம்: தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங் கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். பெருந் தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள். கடகம்: பிரச்னைகளை சமாளிக்கும் மனோ பலம் அதிகரிக்கும்.…

Read More

இன்றைய ராசிபலன் 04.08.2017

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத் தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத் தில் மேலதிகாரி உதவுவார். புதிய பாதை தெரியும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில விஷயங் களில் திட்டமிட்டது ஒன்றா கவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். முன்கோபத் தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள். மிதுனம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர் கள். உத்யோகத்தில்…

Read More

இன்றைய ராசிபலன் (03.08.2017)

மேஷம்: இன்றும் இரவு 8.27 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனஉளைச்சல் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள்.பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.   ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் அனுகூலமும் வியாபாரத்தில் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். இரவு 8.27 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.   மிதுனம்: கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தொட்டது துலங்கும் நாள்.   கடகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளை கள் கேட்டதை…

Read More

இன்றைய ராசிபலன் (02.08.2017)

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங் களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங் கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். போராட்டமான நாள்.   ரிஷபம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். மனைவிவழி உறவினர் கள் மதிப்பார்கள். பயணங்கள் சிறப் பாக அமையும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். நன்மை கிட்டும் நாள்.   மிதுனம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் அனு கூலம் உண்டு. அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி கள்…

Read More

மீனம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (27.07.2017 முதல் 13.02.2019 வரை)

தன்னலமற்றப் போக்கும், வழிநடத்திச் செல்லும் குணமும் கொண்டவர்களே! ராகுவும் கேதுவும் இணைந்து 27.07.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களைத் தரப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம். ராகுவின் பலன்கள் இதுவரை உங்கள் ராசிக்கு ஆறில் நின்ற ராகு ஒருபுறம் நல்லதைச் செய்து மறுபுறம் வீண் பதற்றம், மன உளைச்சல், மறைமுக எதிர்ப்புகள் என்று கொடுத்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். குடும்பத்தில் குதூகலம் பிறக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். முன்கோபத்தைக் குறைக்கப் பாருங்கள். சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். சொந்தபந்தங்களிடையே இருந்துவந்த மனக்கசப்பு விலகும். எனினும், அவ்வப்போது பணம் கேட்டு நச்சரிப்பார்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்க்கப் பாருங்கள். கோர்ட், கேஸ் என்று நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்காதீர்கள்.…

Read More

கும்பம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (27.07.2017 முதல் 13.02.2019 வரை)

கொடுக்கும் குணம் கொண்ட நீங்கள் விளம்பரத்தை ஒருபோதும் விரும்ப மாட்டீர்கள்! ராகுவும் கேதுவும் 27.07.2017 முதல் 13.02.2019 வரை உங்களுக்கு என்ன பலன்களைத் தரப் போகிறார்கள் என்று பார்ப்போம். ராகுவின் பலன்கள் இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் நின்று கொண்டு உங்களைத் திக்கு திசையறியாது திணற வைத்ததுடன், குடும்பத்தினரையும் உங்களையும் பிரித்து வைத்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் ஆற்றலுடன் வந்தமர்கிறார். வீட்டில் உங்களை எதிரியைப் போல் பார்த்த குடும்பத்தினர் இனி பாசத்துடன் நடந்துகொள்வார்கள். சந்தேகத்தால் பிரிந்த கணவன்-மனைவி ஒன்றுசேர்வீர்கள். மனைவிக்கு அடிக்கடி மருத்துவச் செலவுகள் வந்ததே! இனி ஆரோக்கியம் கூடும். தந்தைவழி உறவினர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு உண்டு. கடன் பிரச்சினைகளில் ஒருபகுதியைத் தீர்ப்பீர்கள். பழைய நகைகளை மாற்றிப் புதிய ஆபரணங்களை வாங்குவீர்கள். வெற்றிபெற்ற மனிதர்களின் நட்பு…

Read More