மொபைல் பேட்டரி நீடிக்க: செய்ய வேண்டியை, செய்ய கூடாதவை…

அனைத்து வித மின்சாதனங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்தது  அதன் பேட்டரி. பேட்டரி வாழ்நாளை நீட்டிக்கவோ அல்லது அதன் பேட்டரி பேக்கப் நேரத்தை அதிகரிக்கவும் சில டிப்ஸ்… சிலர் பேட்டரி முழுமையாக தீர்ந்த பின் அவற்றை மீண்டும் சார்ஜ் செய்வர். ஆனால் பேட்டரி முழுமையாக தீர்ந்த பின் தான் மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும் என எவ்வித கட்டாயமும் இல்லை. பேட்டரி அளவு 10 – 20% வரை இருக்கும் போது அவற்றை மீண்டும் சார்ஜ் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது முழுமையாக சார்ஜ் ஆகும் பேட்டரி திறன் அளவு 1000 முதல் 1100 வரை அதிகரிக்கும். மொபைல் முழுமையாக சார்ஜ் ஆன பின்னரும் சார்ஜரிலேயே போடப்பட்டிருந்தால் எவ்வித பாதிப்பையும் பேட்டரியில் ஏற்படுத்தாது. ஸ்மார்ட்போன் பேட்டரியை சத்தமில்லாமல் கரைப்பது ஜிபிஎஸ் தான். ஸ்மார்ட்போன் எந்த பிரான்டு என்றாலும் அதில் இருக்கும்…

Read More

தேனீக்களுக்கும் கேமரா தொழில்நுட்பத்திற்கும் என்ன தொடர்பு??

துல்லியமாக புகைப்படம் எடுக்கும் கேமராக்களை பல நிறுவனங்கள் அளித்தாலும், துல்லியமான வண்ணங்களைப் பதிவிடும் கேமராக்கள் பெருமளவில் கிடையாது. ஒரு புகைப்படத்தில் மனிதனின் பார்வைக்கும், கேமரா பதிவிட்ட புகைப்படத்துக்கும் சில வேறுபாடுகள் இருக்கும். அந்த வேறுபாடுகள் வண்ணங்களில் பெருமளவு காணப்படும். இந்த வேறுபாடுகளை குறைக்க புதிய தொழில்நுட்பத்தை பற்றி கண்டறிய ஆஸ்திரேலியாவின் RMIT பல்கலைக்கழகம் முயற்சி செய்துவந்தது. இந்நிலையில், அதற்கான தீர்வினைக் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர். தேனீக்கள் பார்வையில் உள்ள தொழில்நுட்பம் போல் பயன்படுத்தினால் மிக துல்லியமான புகைப்படம் எடுக்கும் கேமராக்கள் கண்டறியலாம் என தெரிவித்துள்ளார். மேலும், இந்த தொழில்துட்பத்தை பற்றிய ஆராய்ச்சி தொடரும் என தெரிவித்துள்ளார்.  

Read More

ஃபேஸ்புக் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய நான்கு விடயங்கள்

ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உலகின் எந்தவொரு நாட்டின் மக்கள்தொகையை விடவும் அதிகம் என்றும், தற்போது அது 200 கோடி பயனீட்டாளர்களை எட்டிவிட்டதாகவும் அந்த சமூக ஊடக வலைத்தளம் பறைசாற்றிக்கொள்கிறது. தன்னுடைய தளத்தில் பிரசுரமாகும் மிகப்பெருமளவிலான விஷயங்களை நெறிப்படுத்த வேண்டிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் சூழலில், இந்தக் மைல்கல்லை இந்த இணையப் பெரு நிறுவனம் அடைந்துள்ளது. 13 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இந்த நிறுவனத்தைப்பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய நான்கு விடயங்கள் இதோ. வளர்ச்சியில் பெரும் முன்னேற்றம்ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில், ஃபேஸ்புக் தன்னைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளது. அக்டோபர் 2012-இல் 100 கோடி பயனாளிகளை பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. 200 கோடி பயனாளிகளை அடைந்துள்ளதாக, செவ்வாயன்று, அதன் நிறுவனர் மார்க் பெருமையுடன் கூறியுள்ள எண்ணிக்கை, அவரின் சமூக ஊடகப் போட்டி நிறுவனங்களை விடவும் மிகப்பெரியதாகும். 32.8 கோடி…

Read More

IMEI நம்பரை வைத்து என்னவெல்லாம் பண்ணலாம் தெரியுமா?

நாம் வெளியிடங்களுக்கு செல்லும் போது எதிர்பாராமல் மொபைல் போன் தொலைந்து விட்டால் உடனடியாக நாம் அந்த எண்ணுக்கு போன் செய்வோம். சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட பின் மொபைல் இருக்கும் இடத்தை கண்டறிய முடியுமா? என்றால் கண்டிப்பாக முடியும். நம் அனைவரின் மொபைல் போனுக்கும் தனித்தனியாக IMEI நம்பர் கொடுக்கப்பட்டு இருக்கும். இதன் மூலம் நம் மொபைல் இருக்கும் இடத்தை எளிதாக கண்டறியலாம். IMEI நம்பர் IMEI நம்பர் என்பது நம் மொபைலில் உள்ள 15 இலக்க எண்ணாகும். மொபைல் போன் எந்த நாட்டை சேர்ந்தது, தற்போது எந்த நெட்வொர்க்கில் உள்ளது என்பதை அறியப்பயன்படுகிறது

Read More

ஆப்பிள், சாம்சங்கை பின்னுக்குத் தள்ளி ஜியோமி முதலிடம்

இந்தியர்கள் அதிகம் விரும்பி வாங்கும் ஸ்மார்ட் போன்களில் ஜியோமி முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆப்பிள், சாம்சங் போன்ற பெரிய மொபைல்போன் நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி ஜியோமி முதலிடத்தைப் பிடித்துள்ளது. கலர் மொபைல், கேமரா மொபைல், டச் மொபைல் என்ற பரிமாணங்களைக் கடந்து மொபைல் உலகம் ஸ்மார்ட் போன் உலகில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட் போன்களில் இந்தியாவைப் பொறுத்தவரையில் சாம்சங், ஆப்பிள், ஓப்போ, லாவா, ஹூவாய், ரெட்மி போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்கள் முக்கிய இடத்தைப் பெற்று இருக்கின்றன. இந்த ஸ்மார்ட் போன்களில் ஆப்பிள் போன்களின் விலை மிக அதிகமாகவும், சாம்சங்கின் ஸ்மார்ட் போன்கள் விலை அதிகமாகவும் இருந்து வருகின்றன. ஓப்போ, லாவா, ரெட்மி, போன்ற மொபைல்களின் விலைகள் நடுத்தர மக்களுக்கு ஏற்ற வகையில் இருந்து வருகின்றன. இந்நிலையில் 2017-ம் ஆண்டுக்கான ஸ்மார்ட் போன்கள் விற்பனை குறித்த ஆய்வு அறிக்கை வெளிவந்துள்ளது. அதன்படி 2017-ம் ஆண்டில் ஜியோமி…

Read More

புதிய வர்ணத்தில் அறிமுகமாகின்றது iPhone 7 மற்றும் iPhone 7 Plus..

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே. எனினும் தனது கைப்பேசிகளுக்கான சில சிறப்பம்சங்களை ஆப்பிள் நிறுவனம் நீண்ட காலத்திற்கு மாற்றாமல் வைத்திருக்கும். அதில் வர்ணங்களும் உள்ளடங்கும். இதற்கு காரணம் குறித்த கைப்பேசிகளுக்கான வரவேற்பினை மீண்டும் தூண்டுவதாகும். இதுவரை காலமும் Jet Black, Black, Silver, Gold, Rose Gold ஆகிய வர்ணங்களிலேயே அறிமுகமாகி வந்தது. இந்நிலையில் தற்போது கண்கவர் சிவப்பு நிறத்திலான iPhone 7 மற்றும் iPhone 7 Plus கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இவை ஐக்கிய இராச்சியத்தின் பிரபல தொலைபேசி வலையமைப்பு நிறுவனமான Vodafone ஊடாக அறிமுகம் செய்யப்படவுள்ளது. எதிர்வரும் 24ம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசிகள் 128GB சேமிப்பு நினைவகம், 256GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Read More

போலி சாதனங்களை கண்டறிய சில டிப்ஸ்: இனியும் ஏமாறாதீர்கள்

பல்வேறு சிறு நிறுவனங்களும் போலி சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் போலி சாதனங்கள் பார்க்கவும் பிரான்டெட் போன்றே காட்சியளிப்பதால் பலரும் பிரான்டெட் என்ற நம்பிக்கையில் போலி சாதனங்களை வாங்கி ஏமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. மலிவு விலையில் கிடைக்கும் சாதனங்களின் விற்பனை அதிகமாக இருக்கிறது. மலிவு விலையில் கிடைக்கும் சாதனங்கள் நமக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதோடு சாதனத்தை மிக விரைவில் பாழாக்கி விடும். இவ்வாறான பாதிப்புகளில் சிக்காமல் போலி சாதனங்களை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.. பேக்கேஜிங் ஊஷார்: பிரான்டெட் நிறுவனங்களின் சாதனங்களில் ஒவ்வொரு அம்சமும் கவனமாக கட்டமைக்கப்படும். இது எல்லாவற்றிலும் பொருந்தும் என்பதால் சாதனத்தின் பேக்கேஜிங் உட்பட அனைத்துமே கச்சிதமாக இருக்கும். இதனால் பேக்கேஜிங்கில் ஏதேனும் சொதப்பல் இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். யூஸர் மேனுவல்: நீங்கள் வாங்கும் சாதனத்தின்…

Read More