ஜப்பானில் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானின் அணு உலை நகரமான ஃபுகுஷிமாவை சற்றுமுன் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. ரிக்டர் அளவில் 6.2 எனப் பதிவாகியிருக்கும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.37 மணிக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம், நிலத்தில் இருந்து பத்து கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் அளவிடப்பட்டுள்ளது.

Read More

முடிவுக்கு வந்தது 33 வருட சகாப்தம்… மிஸ் யூ அண்டர்டேக்கர்!

`தி அண்டர்டேக்கர்’, உலகெங்கிலும் உள்ள ரெஸ்ட்லிங் ரசிகர்களின் மனதில் ஆழப்பதிந்திருக்கும் பெயர். அதை செய்ய கிட்டதட்ட 33 ஆண்டுகள் உதிரம் சிந்தி, எலும்புகள் நொறுங்க, சதை கிழிந்து சண்டை போடவேண்டியிருந்தது மார்க் காலவேவுக்கு. 1965 ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் வசித்துவந்த ஃபிரான்ட் காம்ப்டன் காலவேவுக்கு ஐந்தாவது ஆண் குழந்தையாக பிறந்தான் மார்க் காலவே. சிறுவயதில் இருந்தே விளையாடுவதில் அவனுக்கு பெரிதளவில் ஆர்வம் இருந்தது. கடைக்குட்டி மார்க் காலவேவுக்கு தனது நான்கு அண்ணன்களுடன் இணைந்து விளையாடுவது தான் ஒரே பொழுதுபோக்கு. தனது பள்ளியின் கால்பந்து மற்றும் கூடைப்பந்து அணிகளிலும் நட்சத்திர ஆட்டக்காரனாக வலம் வந்தான். ஆறே முக்கால் அடி உயரமும் ஒல்லியான தேகமும் கூடைபந்து விளையாட்டில் பெரும் பக்கபலமாய் அமைய, நிறைய விளையாடி, நிறைய வென்றான். அந்த தகுதி, ஏஞ்சலினா கல்லூரியில் பட்டப்படிப்பு பயிலும் வாய்ப்பையும்…

Read More

எதிர்பார்ப்பு தவிடுபொடி; 4 வருட சிறை; 10 வருடம் அரசியலுக்கு தடை

சசிகலா நடராஜன் உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 இலட்சத்துக்கும் அதிகமான சொத்து சேர்த்ததாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியயோர் குற்றவாளிகள் என உச்சநீதின்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் சசிகலா, முதல்வர் பதவிக்கான தகுதியை இழந்துள்ளமை தமிழ் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணமடைந்து விட்டதால் அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஏனைய மூவரும் நான்கு வாரத்திற்குள் சரணடைய வேண்டும் எனவும் மூவருக்கும் தலா ரூ. 10 கோடி அபராதம் செலுத்துமாறும் உச்சநீதின்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம், சசிகலாவின் சிறைத் தண்டனையான 4 வருடங்கள்…

Read More

நியுசிலாந்தில் 5.1 ரிக்ட்டர் அளவில் நிலநடுக்கம்

நியுசிலாந்து வடகிழக்கு தீவு பகுதியில் 5.1 ரிக்ட்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

Read More

சூறாவளியில் சிக்கி 18 பேர் பலி : அமெரிக்காவில் சம்பவம்

அமெரிக்காவின் தெற்கு பிராந்தியங்களில் ஏற்பட்ட பாரிய சூறாவளியில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜோர்ஜியா, அலபாமா, புளோரிடா மற்றும் மிசிசிப்பி உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கடும் மழை பெய்துள்ளது. இச்சூழலில் குறித்த மாநிலங்களில் கடுமையான காற்று வீசியுள்ளதோடு, நேற்றைய தினம் சூறாவளியாக மாறி குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த சூறாவளியில் சிக்கி இது வரை சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பிராந்தியங்களுக்கு விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை அறிவிப்பையடுத்து, வெளியேறிய குடியிருப்பாளர்களுக்கு தற்காலிக தங்குமிட முகாம்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், பாதிப்படைந்த இடங்களில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

நீங்கியது தடை ; நாளை தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு

 தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டுமென கோரி மாணவர்கள் மற்றும் உலகலாவிய ரீதியில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் இந்தியாவின் மத்திய அரசு மற்றும் மாநில அரசும் ஒருங்கிணைந்து அவசரச் சட்டம் கொண்டு வருவதை உறுதி செய்துள்ளன. இதன்மூலம் ஜல்லிக்கட்டுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாளை தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான அவசரச் சட்ட கோப்பு தமிழ்நாட்டுக்கு நேற்று வந்து சேர்ந்தத நிலையில், அந்த கோப்பில் கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று மாலையில் கையொப்பமிட்டு முறைப்படி அவசர சட்டத்தை பிறப்பித்தார்

Read More

அலங்காநல்லூரில் 2வது நாளாக விடிய விடிய தொடரும் ஜல்லிக்கட்டு போராட்டம்..

மதுரை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அலங்காநல்லூரில் விடிய விடிய போராட்டம் நடைபெற்றது.

Read More

66 பேரின் உயிரை பலியெடுத்த ஐபோன் பெட்டரி…! MS804 விமானத்தில் நடந்தது என்ன..?

ஐபோன் பெட்டரி தீப்பிடித்தமையின் காரணமாக எகிப்து நாட்டுக்கு சொந்தமான MS804 என்ற விமானம் வெடித்து

Read More