VCC இல்ல விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டி நிகழ்ச்சிகள் ஆரம்பமாகியது

(டினஸ்ரன்,செலர்,தனுஜன்)

விபுலானந்த மத்திய கல்லூரியின் இந்த வருடத்திற்கான இல்ல விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள் சிறப்பாக இடம் பெறுகின்ற தருவாயில் இன்று புதன்கிழமை விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டி நிகழ்ச்சிகள் இன்று (22)ஆரம்பமாகி காரைதீவு கனகரெட்னம் அரங்கில் சிறப்பாக இடம்பெற்றது.

கல்லூரியின் முதல்வர் திரு.வித்தியராஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் வி.ரி சகாதேவராஜா மற்றும் பாடசாலை பழைய மாணவ சங்க செயலாளர் வி.விஜயசாந்தன் ஆகியோர் கலந்து கொண்டு இன்றய நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்தனர்.

இன்று ஆண்பெண் இரு பாலாருக்குமாக இடம்பெற்ற போட்டி நிகழ்சிகளாக (5000,100,400,800)மீட்டர் ஓட்டம்,நீளம் பாய்தல்,பரிதிவட்டம் வீசுதல்,குண்டு எறிதல்,ஈட்டி எறிதல், போன்ற நிகழ்சிகள் இடம் பெற்றன.

இன்று நிகழ்ச்சி முடிவடையும் வரை ஒட்டு மொத்த புள்ளிகளின் அடிப்படையில்

168 புள்ளிகளுடன் மருதம் இல்லம் 1ம் இடம்

152 புள்ளிகளுடன் முல்லை இல்லம் 2ம் இடம் இடம்

145 புள்ளிகளுடன் குறிஞ்சி இல்லம் 3ம் இடம்

இன்றய நிகழ்ச்சிகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் குறிஞ்சி இல்லம் முதல் இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றய போட்டி நிகழ்சிகளின் போதான படங்கள்…

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்