VSC வசமானது குமாரவேல் ஞாபகார்த்த வெற்றி கிண்ணம்

காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகம் தனது 30வது ஆண்டை சிறப்பிக்கும் வகையிலும் விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தின் போசகர்களில் ஒருவரான அமரத்துவம் அடைந்த அமரர்.குழந்தைவேல் குமாரவேல் அவர்களின் 13ம் வருட நினைவு தினத்தை முன்னிட்டு விவேகானந்தா விளையாட்டுக்கழகம் நடாத்திய குமாரவேல் வெற்றிக்கிண்ண கடின பந்து கிரிக்கெட் போட்டியானது இன்று (10) காரைதீவு கனகரெட்னம் மைதானத்தில் கழக செயலாளர் திரு.உமாரமணன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
காரைதீவு விவேகானந்தா மற்றும் காரைதீவு ஜொலிகிங்ஸ் விளையாட்டு கழகம் மோதிய இப் போட்டியில் ஆரம்பத்தில் துடுப்பெடுதாடிய விவேகானந்தா விளையாட்டு கழகம் 20 ஓவர்களில் 07விக்கெட்களை இழந்து 204 ஓட்டங்களை பெற்றது.துடுப்பாட்டத்தில் விசிகரன் 48ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.
205 என்கின்ற கடினமான இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜொலிகின்ஸ் அணியினர் 88ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களை இழந்து 116 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது. இப்போட்டியின் சிறந்த வீரராக விசிகரன் தெரிவு செய்யப்பட்டார்.
இப்போட்டியில் விவேகானந்தா விளையாட்டு கழக சிரேஸ்ர உறுப்பினர்கள் அதிதிகளாக கலந்து சிற்ப்பித்து வெற்றி கிண்ணங்களை வழங்கி வைத்தனர். 
படங்கள்-தினேஷ்