VSC விளையாட்டு கழகத்தினரால் காரையடி பிள்ளையார் ஆலயத்தில் சிரமதானம்

காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் 30ம் ஆண்டு நிகழ்வுகளின் வரிசையில் கழக செயலாளர் கோ.உமாரமணன் எற்பாட்டில் திருநாவுக்கரசு நாயனார் குருபூசையினை சிறப்பிக்கும் வகையில் காரைதீவு,காரையடி ஸ்ரீ அம்பாரை பிள்ளையார் ஆலயத்தில் சிரமதான நிகழ்வானது கழகத்தின் தலைவர் திரு.ச.நேசராசா அவர்களினது தலமையில் இன்று (23) இடம் பெற்றது.

இந்நிகழ்வானது காரைதீவு காரையடி அம்பாரைப் பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக தின அஷ்டோத்திர சத சங்காபிஷேகமும் அலங்கார உற்சவ விஞ்ஞாபனத்தை முன்னிட்டு இடம் பெற்றது. இன் நிகழ்வில் கழக சிரேஸ்ர உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.